கம்பராமாயணம் 4521 · கிட்கிந்தா 11.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணின்மேல் வந்த - பூமியின்மேல் ஒருங்கு திரண்டு வந்த; வானர சேனையின் வரம்பு - வானரப் படையின் அளவை; எண்ணின் - எண்ணத் தொடங்கினால்; நான்முகர் எழுபதினாயிரர்க்கு - எழுபதினாயிரம் பிரமர்களுக்கும்; இயலா - முடியாது; உண்ணின் - (இவ் வானர சேனைகள்) உண்ணத் தொடங்கினால்; அண்டங்கள் - அண்டங்களும் யாவும்; ஓர் பிடி உண்ணவும் உதவா - ஒவ்வொரு வானரமும் ஒரு பிடியளவாக உண்ணவும் போதாது; கண்ணின் நோக்குறின் - கண்ணால் பார்க்க வேண்டுமாயின்; கண்ணுதலானுக்கும் கதுவா - நெருப்புக் கண்ணை நெற்றியிலுடையவனாகிய சிவபெருமானாலும் காண இயலாது.
இவ்வானரப் படையைப் படைத்த பிரமன் போன்ற எழுபதினாயிரம் பிரமர்கள் ஒருங்கே திரண்டு வந்தாலும் இச் சேனையை அளவிடமுடியாது. இயல்பான இரண்டு கண்களுடன் நெருப்புக் கண்ணையும் நெற்றியில் கொண்ட சிவனாலும் பார்க்கவியலாத பரப்பளவு கொண்டது அவ்வானரப்படை என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If counted, it is beyond seventy thousand four-faced Brahmās;
- if they ate, all the worlds would not make a single handful;
- if looked at with the eyes, even the one with an eye in his forehead could not take it in:
- such is the extent of the monkey army that came upon the earth.
What the poem says
More hyperbole for the size of the army. Seventy thousand Brahmās, the four-faced creator, could not count it; all the worlds together would not make one mouthful for it; and even Śiva, who has a third eye of fire in his forehead, could not take it all in at a glance.