கம்பராமாயணம் 4522 · கிட்கிந்தா 11.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒடிக்குமேல் - (அவ்வானர சேனை) ஒடிக்க வேண்டும் என்று கருதினால்; வட மேருவை வேரொடும் ஒடிக்கும் - வடக்கிலுள்ள மேரு மலையையும் அடியோடு ஒடித்துவிடும்; இடிக்குமேல் - இடிக்க வேண்டுமென்று கருதினால்; நெடு வானக முகட்டையும் இடிக்கும் - பெரிய ஆகாயத்தின் மேல் முகட்டையும் இடித்து விடும்; பிடிக்குமேல் - பிடிக்க வேண்டும் என்று விரும்பினால்; பெருங் காற்றையும் - பெரிய காற்றையும், கூற்றையும் பிடிக்கும் - யமனையும் பிடித்து விடும்; குடிக்குமேல் - குடிக்க வேண்டும் என்று நினைத்தால்; கடல் ஏழையும் - ஏழு கடல்களையும்; குடங்கையின் குடிக்கும் - உள்ளங்கையால் அள்ளிக் குடித்து விடும்.
பிறர் எவராலும் செய்யமுடியாத அரிய பெரிய செயல்களையெல்லாம் எளிதில் செய்து முடிக்கும் இவ் வானரப்படை என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If it would break, it would break northern Mēru, roots and all;
- if it would pound, it would pound down even the summit of the high heavens;
- if it would seize, it would seize even the great wind, and Death;
- if it would drink, it would drink all seven seas from the hollow of its hand.
What the poem says
The poet lists what the monkey army could do if it wished: snap Mount Mēru off at its roots, batter down the very dome of the sky, catch hold of the wind and of Death, and drink the seven oceans from cupped palms. Nothing others find impossible would be hard for it.