கம்பராமாயணம் 4523 · கிட்கிந்தா 11.25

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூறு திக்கினுக்கு அப்புறம் - (எட்டாகச் சொல்லப்படும் திசைகளுக்கு அப்பாலும்; குப்புறற்கு உரியார் - தாண்டிக் குதிக்கத்தக்க வல்லமையுள்ளவர்களும்; மாறு இல் கொற்றவன் - இணையற்ற தங்கள் அரசனான சுக்கிரீவன்; நினைத்தன முடிக்குறும் வலியர் - எண்ணிய செயல்களை உடனே செய்து முடிக்கும் மனவுறுதியுடையவர்களுமாகிய; ஆறு பத்து எழுகோடியாம் - அறுபத்தேழு கோடி அளவுள்ள; வானரர்க்கு அதிபர் - வானர சேனைத் தலைவர்; ஊறும் இப் பெருஞ் சேனை கொண்டு - மேன்மேலும் பெருகுகின்ற இப் பெருஞ் சேனையைத் திரட்டிக் கொண்டு; எளிதின் வந்துற்றார் - எளிதில் வந்து சேர்ந்தார்கள்.

இவ்வாறு அறுபத்தேழுகோடி வானரப் படைத் தலைவர்கள் சுக்கிரீவனின் தூதுவர் வந்து சொல்லியவுடனே தம் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தனர் என்பது. குப்புறல் - குதித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sixty and seven crores of chiefs of the monkeys,
  2. able to leap beyond the directions men speak of,
  3. strong enough to accomplish whatever their peerless king intends,
  4. came with ease, bringing this great, ever-swelling army.

What the poem says

In all, sixty-seven crores of monkey commanders have come. Each can leap beyond the bounds of the eight directions, and each has the resolve to carry out at once whatever their unrivalled king Cukkirīvaṉ wishes. As soon as his messengers reached them, they gathered their ever-growing forces and came without difficulty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟu pattu eḻu kōṭiyām, vāṉararkku atipar,
kūṟu tikkiṉukku appuṟam kuppuṟaṟku uriyār,
māṟu il koṟṟavaṉ niṉaittaṉa muṭikkuṟum valiyar,
ūṟum ip peruñ cēṉai koṇṭu eḷitiṉ vantuṟṟār.