கம்பராமாயணம் 4524 · கிட்கிந்தா 11.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வீரரும் - அந்த வானரப் படைத் தலைவர்களும்; ஏழு மா கடல் பரப்பினும் - ஏழு பெரிய கடல்களின் பரப்பளவைக் காட்டிலும்; பரப்பு என இசைப்ப - விரிந்துள்ளது என்று கூறுமாறு; சூழும் வானரப் படையொடு - சூழ்ந்துள்ள வானர சேனையுடனே; துவன்றி - நெருங்கிவந்து; ஆழி மா பரித்தேரவன் காதலன் - ஒற்றைச் சக்கரத்தையும் சிறந்த குதிரைகளையுமுடைய தேரைச் செலுத்துபவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவனுடைய; அடிகள் வாழி வாழி என்று உரைத்து - திருவடிகள் வாழ்க வாழ்கவென வாழ்த்தி; வணங்கி - வழிபட்டு; அலர் தூவினர் - மலர்களைத் தூவினார்கள்.
சூரியனது தேர், காலத்தின் வடிவமான ஒற்றைச் சக்கரத்தையும் ஏழு குதிரைகளையும் உடையது என்பது நூற் கொள்கை.
வாழி வாழி - அடுக்கு அன்பின் மிகுதி பற்றியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the monkey army surrounding them, said to spread wider
- than the expanse of the seven great seas, those heroes thronged in,
- and saying, 'Long live, long live the feet of the beloved son
- of him whose chariot has one wheel and great horses!', they bowed and scattered flowers.
What the poem says
The monkey commanders, with their armies spread wider than the seven seas, crowd forward to pay homage to Cukkirīvaṉ. Bowing and scattering flowers, they cry "Long live your feet!" to the son of the Sun, whose chariot has a single wheel, symbolising time, and seven horses. The doubled blessing expresses their warmth.