கம்பராமாயணம் 4529 · கிட்கிந்தா 11.31

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எட்டுத் திக்கையும் இருநிலப் பரப்பையும், இமையோர்
வட்ட விண்ணையும், மறிகடல் அனைத்தையும், மறைப்பத்
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி,
இட்டுச் செம்மிய நிறைகுடம் ஒத்தது இவ் அண்டம்.

பொருள் · Meaning in Tamil

எட்டுத் திக்கையும் - எட்டுத் திசைகளையும்; இரு நிலப் பரப்பையும்- பெரிய பூமியின் விரிந்த இடம் முழுவதையும்; இமையோர் வட்டவிண்ணையும் - தேவர்கள் வாழ்கின்ற வட்டவடிவமான மேலுலகத்தையும்; மறிகடல் அனைத்தையும் - அலைகள் வீசும் ஏழு கடல்களையும்; மறைய- மறையும்படி; தொட்டு மேல் எழுந்து ஓங்கிய - தரையிலிருந்து மேலெழுந்து பரந்த; தூளியின் - (படைகளின் புழுதியால்; இவ் அண்டம் - இந்த அண்ட கோளமானது; பூழி அட்டிச் செம்மிய- புழுதியை இட்டு மூடிய; நிறை குடம் ஒத்தது - நிறை குடத்தை ஒத்திருந்தது.

புழுதியால் நிறைந்த நிறைகுடத்தைத் தூளியால் நிரம்பிய அண்ட கோளத்திற்கு உவமையாக்கினார்.

தன்மைத் தற்குறிப்பேற்றவுவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the dust that rose from the ground and soared up, hiding
  2. the eight directions, the broad expanse of earth, the round heaven of the gods,
  3. and all the rolling seas,
  4. this cosmic egg was like a full pot packed and stopped with dust.

What the poem says

The marching army raises so much dust that it hides the eight directions, the earth, the round heaven of the gods and all the seas. The whole universe, imagined in Indian cosmology as a vast egg, looks like a pot filled to the brim with dust and sealed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭut tikkaiyum iru nilapparappaiyum, imaiyōr
vaṭṭa viṇṇaiyum, maṟi kaṭal aṉaittaiyum, maṟaiyat
toṭṭu mēl eḻuntu ōṅkiya tūḷiyiṉ pūḻi,
aṭṭic cemmiya niṟai kuṭam ottatu iv aṇṭam.