கம்பராமாயணம் 4530 · கிட்கிந்தா 11.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அத்தி ஒப்பு எனின் - (இச் சேனைத் தொகுதிக்கு) கடல் நிகராகுமென்று கூறினால்; அன்னவை உணர்ந்தவர் உளர் - அக் கடல்களின் அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள் (இச் சேனையின் பரப்பைக் கண்டவர்கள் இல்லை); இனி வித்தகர்க்கு - இனிமேல் அறிவுடையவரால்; உரைக்கல் ஆம் உவமை - (இச் சேனைக்கு) எடுத்துக் கூறும் உவமை; வேறு யாதோ - வேறு யாது உள்ளது (எதுவுமில்லை); பத்து இரட்டி நன்பகல் இரவு - இருபது நாட்கள் பகலிலும் இரவிலும்; ஒருவலர் பார்ப்பர் - இடைவிடாமல் பார்ப்பவராகிய இராமலக்குவர்; எத் திறத்தினும் - எவ்வகையாலும்; நடுவு கண்டிலர் - (இச் சேனையின்) நடுவையும் காணாதவராயினர்; முடிவு எவனோ - (அவ்வாறானால்) இதன் முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ?
அறிவாளிகளான இராமஇலக்குவர் இருபது நாள் அல்லும் பகலும் இடை விடாமல் பார்த்து இச் சேனையின் நடுவெல்லைக் கூடக் காணாதவராயினர் அப்படியிருக்க, இனி இதன் முடிவெல்லையை யாரால் காண முடியும் என்றவாறு. அத்தி - கடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If one says the ocean is its equal, there are those who have learned the ocean's measure;
- what other comparison is left now for the wise to offer?
- Watching without a break for twice ten good days and nights,
- they could not by any means see its middle; how then its end?
What the poem says
No comparison will do. Even the ocean has been measured by some, but no one could measure this army. Irāmaṉ and Ilakkuvaṉ watched it march past day and night for twenty days without seeing even its middle; how could anyone ever see its end?