கம்பராமாயணம் 4532 · கிட்கிந்தா 11.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மடல்கொண்டு ஓங்கிய அலங்கலாய் - இதழ்கள் நிறைந்து சிறந்த மாலையை அணிந்தவனே! நாமும் நம் அறிவால் - நாம் இருவரும் நமது அறிவு கொண்டு; அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு - வலிமை பெற்றுச் சிறந்துள்ள இந்த வானரப் படையின்; உடல் கண்டோம் - நடுவிடத்தை ஓரளவு பார்த்தோம் (அல்லாமல்); இனி உள - இனி இதற்குள்ள; முடிவு காணுமாறு உளதோ - முடிவெல்லையைக் காணும் வகை ஏதேனும் உண்டோ? மண் இடை - இந் நிலவுலகத்தில்; மாக்கள்- மனிதர்கள்; கடல் கண்டோம் என்பர் - கடலைப் பார்த்தோம் என்று சொல்வார்கள் (ஆனால்); முடிவு உறக் கண்டார் யாவரே - அக்கடலின் முடிவெல்லையைக் கண்டறிந்தவர் யார்தாம்?
கடலைக் காண்பவர் அதன் ஒரு பகுதியை மட்டும் காண்பாரேயல்லாமல் அதன் முடிவெல்லையைக் காணமாட்டார்கள்; அதைப்போல நாமும் இச்சேனைக் கடலின் ஒரு பகுதியை மட்டும் கண்டோமேயல்லாமல் இதன் முடிவெல்லையைக் காணமுடியாது என்பது.
சேனைக்கு: உருபு மயக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Of this army towering in strength, we too, by our understanding,
- have seen the body; is there any way now to see where it ends?
- You with the garland rich in petals! People on earth
- say, "We have seen the sea"; but who has seen it to its end?'
What the poem says
Irāmaṉ speaks to Ilakkuvaṉ. With all their understanding, they have managed to take in only the body of this mighty army; there is no way to see its far end. It is like the sea: people say they have seen the sea, but no one has ever seen where it ends.