கம்பராமாயணம் 4533 · கிட்கிந்தா 11.35

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாச மாலையாய் - மணம் நிறைந்த மாலையை அணிந்தவனே! ஈசன் மேனியை - இறைவனின் திருமேனியையும்; ஈர் ஐந்து திசைகளை - பத்துத் திக்குகளையும்; ஐம்பெரும் பூதத்தை - ஐந்து பெரிய பூதங்களையும்; அறிவை - நுட்பமான அறிவையும்; பேசும் பேச்சினை - பேசும் மொழிகளையும்; சமயங்கள் பிணக்குறும் பிணக்கை - தமக்குள் சமயங்கள் மாறுபடுகின்ற மாறுபாட்டையும்; ஈண்டு இவ் ஆசு இல் சேனையை - இங்கே திரண்டுள்ள குற்றமற்ற இவ்வானரப் படையையும்; யாவரே முடிவு எண்ண வல்லார் - எவர்தாம் அவற்றின் முடிவைக் கணக்கிட வல்லவர்?

உபமேயமாகிய சேனையையும் உவமானமாகிய ஈசன்மேனி முதலியவற்றையும் ஒருங்கே ஒரு பொதுத் தன்மையைக் கொண்டு முடியுமாறு கூறப்பட்டுள்ளது. இறைவன் எங்குமுள்ளவனாதலால் அவனது திருமேனி அளவிட்டு அறிய முடியாதது; ஐம்பெரும் பூதங்கள் உலக முழுவதும் நிரம்பியிருத்தலால் அவற்றிற்கும் ஓர் அளவு இல்லை; புதிது புதிதாகப் பொருள்களை அறியும் அறிவுக்கும் ஓர் எல்லையில்லை; ஒருவர் ஒன்று பேசும்போது அதனைத் தொடர்ந்து பேச இடம் உண்டாதலால் அதற்கும் ஓர் அளவில்லை. தன் தெய்வம் என் தெய்வம் என்று பேசிச் சழக்கிடும் சமய வாதங்களுக்கும் முடிவில்லை. இவற்றைப் போலவே வானரப் படையின் அளக்கமுடியாத நிலை இங்கே காட்டப்பெற்றுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The body of God, the twice five directions, this
  2. flawless army here, the five great elements, knowledge,
  3. the talk that people talk, the quarrels in which the creeds wrangle:
  4. you with the fragrant garland, who is able to reckon their end?'

What the poem says

Irāmaṉ continues. The army is like other things that have no limit: the form of God, who is everywhere; the ten directions; the five elements that fill the world; knowledge, which always finds more to know; human talk, which always gives rise to more talk; and the endless disputes of rival religions, each insisting on its own god. No one can find the end of any of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'īcaṉ mēṉiyai īr aintu ticaikaḷai, īṇṭu iv
ācu il cēṉaiyai, aimperum pūtattai aṟivai,
pēcum pēcciṉai, camayaṅkaḷ piṇakkuṟum piṇakkai,
vāca mālaiyāy! yāvarē muṭivu eṇṇa vallār?