கம்பராமாயணம் 4534 · கிட்கிந்தா 11.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்ன சேனையை - இத்தகைய படையை; இவண் இருந்து முடிவுற நோக்கி - இங்கேயிருந்து முழுவதும் நன்றாகப் பார்த்து; பின்னை - அதன் பின்பு; காரியம் புரிதுமேல் - (நமது) செயலைச் செய்யத் தொடங்குவோமானால் (இதைப் பார்த்து முடிவதற்குள்; நாள் பல பெயரும் - பல நாட்கள் கழிந்து விடும்; உன்னி - (ஆகவே இனிச் செய்ய வேண்டியவற்றை) நன்றாக ஆராய்ந்து; செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி - செய்யவேண்டிய செயலில் மனம் ஒன்று பட்டுச் செய்ய முற்படுவதே நன்மை தருவதாகும்; என்ன - என்று (இராமன் கூற); இளையவன் - இலக்குவன்; வீரனைக் கை தொழுது இயம்பும் - இராமனை வணங்கிக் கூறலானான்.
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால் (7382) என்றும் கும்பகருணனின் உருவத் தோற்றம் வருணிக்கப்பட்டதை இங்கு ஒப்பிட்டுணரலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If we stay here and watch this army through to its end,
- and only then set about our task, many days will pass;
- to think it through and set our minds on the deed is what will serve us',
- said he; and the younger brother, joining his hands to the hero, spoke.
What the poem says
Irāmaṉ realises that if they wait to watch the entire army pass, many days will be lost. It is better to think carefully and turn at once to the work in hand, the search for Cītai. Ilakkuvaṉ bows with joined palms and replies. The commentary compares a later verse in which Kumpakaruṇaṉ's body is so vast that looking along it from shoulder to shoulder would take many days.