கம்பராமாயணம் 4535 · கிட்கிந்தா 11.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவ - தேவனே! இங்கு இவர்க்கு - இங்குள்ள வானர வீரர்களுக்கு; எவ் உலகத்தினின் - எந்த உலகத்தில்; யாவது இயற்றல் ஆவது - எதைச் செய்து முடிக்கவேண்டியதிருந்தாலும்; ஆகுவது ஆவது - அச்செயல்கள் எளிதில் கைகூடிவிடும்; அரியது ஒன்று - (அவ்வாறாக இவர்களுக்குச் செய்வதற்கு) அரிய செயல்; உளது எனல் ஆமே - உள்ளது என்று சொல்வதற்கு இடமுண்டோ? தேவியைத் தேடுவது என்பது - சீதையைத் தேடிக் கண்டு பிடிப்பதென்பது; சிறிது - (இவர்களது பேராற்றலுக்கு) மிகவும் எளிதான செயலாகும்; இப்படையால் - இந்தச் சேனையால்; பாவம் தோற்றது- பாவம் தோல்வியடைந்தது; தருமமே வென்றது - தருமமே வெற்றிபெற்றது.
எந்த உலகத்தில் எச் செயல் செய்யவேண்டுமானாலும் இவர்களுக்கு எளிதில் செய்ய முடியுமென்பது. நல்லறத்தின் வழி நிற்கும் நமக்கு இச் சேனை கிடைத்தது பாவம் அழிவதற்கும் தருமம் தழைப்பதற்கும் ஓர் அறிகுறி என்றான் இலக்குவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Whatever is to be done in any world, for these here
- it will be done; can one say there is anything too hard for them?
- Lord! Searching for the queen is a small thing;
- with this army, sin is defeated and dharma alone has won.'
What the poem says
Ilakkuvaṉ replies that there is nothing in any world these monkeys could not accomplish. For such a force, finding Cītai is a small matter. He sees the arrival of this army as a sign that evil has already lost and righteousness has already triumphed.