கம்பராமாயணம் 4536 · கிட்கிந்தா 11.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தரங்க நீர் எழு - அலைகள் வீசும் நீரில் முளைக்கும் இயல்புள்ள; தாமரை நான்முகன் - தாமரை மலரின் உதித்த பிரமன்; தந்த - படைத்த; வரம் கொள் - மேன்மையைப் பெற்ற; பேர் உலகத்தினில்- இப் பெரிய உலகத்திலுள்ள; மற்றை மன் உயிர்கள் - நிலை பெற்ற மற்றைய உயிரினங்களை; உயிர் படைத்து எழுந்தன - உயிர் பெற்று வந்தனவாகிய; உரம் கொள் - வலிமை கொண்ட; மால் வரை ஒக்கும் - பெரிய மலைகளைப் போன்ற; குரங்கின் மா படைக்கு - இந்தப் பெரிய வானர சேனைக்கு; உறை இட - உறையிட்டுக் கணக்கிடுவதற்காகவே, படைத்தனன் கொல் - படைத்தான் போலும்.
பிற உயிர்களெல்லாம் இச் சேனையிலுள்ள வானரத் தொகைக்கு உறையிடுவதற்கென்றே படைக்கப்பட்டனபோலும் என்பது.
உறை: பெரிய எண்ணைக் குறிப்பிட அடையாளமாக வைக்கும் சிறு பொருள்.
அலருளோன் ஆதியாக ஒழிந்த வேறு உயிர்களெல்லாம் அரக்கருக்கு உறையும் போதா' (4868) 'உறையிடவும் போதார் - (5344) என்ற இடங்களிலும் இக்கருத்து வந்துளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In the great world of blessings made by the four-faced one
- of the lotus that rises from wave-tossed water, did he create all other living beings
- only as tally-markers for this great army of monkeys,
- who are like mighty great mountains that have taken life and risen up?'
What the poem says
Ilakkuvaṉ marvels further. The monkeys look like great mountains that have come to life. Perhaps, he says, Brahmā, born on the lotus, created all the other creatures in the world only to serve as counters for tallying this army. A tally-marker was a small object set aside for each large unit when counting a great number. The poet uses the same image elsewhere of the demon hosts.