கம்பராமாயணம் 4537 · கிட்கிந்தா 11.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீண்ட நூல் வலாய்- பெருமை வாய்ந்த நூல்களில் வல்லவனே; எண்திசை மருங்கும் - எட்டுத் திசைகளினிடங்களிலெல்லாம்; தேண்டுவார்களை - (சீதையைத்) தேடுவதற்கு உரியவர்களை; வல்லையில் செலுத்துவது அல்லால் - விரைவாக அனுப்புவதல்லாமல்; இனி ஈண்டுத் தாழ்க்கின்றது என் - இனிமேலும் இங்கிருந்து காலதாமதம் செய்வது எதற்காக? என்றனன் இளையவன் - என்று இலக்குவன் கூறினான். நெடியோன் - பெருமை மிக்கவனான இராமன்; பூண்ட தேரவன் காதலற்கு- ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரையுடையவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கு, ஒரு மொழி புகலும் - ஒரு வார்த்தை சொல்லலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Why delay here now, rather than swiftly sending
- searchers into every one of the eight directions,
- you who are master of the vast scriptures?' said the younger brother; and the tall one
- spoke a word to the beloved son of him whose chariot is yoked.
What the poem says
Ilakkuvaṉ urges that there be no more delay: searchers must be sent at once into all eight directions. Irāmaṉ, "the tall one", a common epithet of Vishnu, then turns to speak to Cukkirīvaṉ, son of the Sun, whose chariot is drawn by seven horses. This is the last verse of the chapter on viewing the army; the next chapter tells of the search parties being sent out.