கம்பராமாயணம் 4538 · கிட்கிந்தா 12.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வகையும் - ஆராய்தலும், மானமும் - ஒப்புமையும்; மாறு எதிர்ந்து ஆற்றுறும் பகையும் - எதிர்த்துச் செயல்படக்கூடிய பகைவரும் இன்றி - இல்லாமல்; நிரைந்து - வரிசையாக அமைந்து; பரந்து எழும் - விரிவாகப் பரவி எழுந்துள்ளதும்; தகைவு இல் சேனைக்கு - தடுப்பதற்கு எவரும் இல்லாததுமான சேனைக்கு; அலகு சமைந்தது ஓர் தொகையும் உண்டுகொலோ - அளவு கொண்டு சொல்லக்கூடிய ஓர் எண்ணிக்கையும் உண்டோ: என - என்று இராமன் வினவ; சொல்லினன் - சுக்கிரீவன் பின்வருமாறு சொன்னான்.
தலைவன் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுதலன்றி வேறு ஆய்வு மேற்கொள்ளுதல் படைவீரர்களுக்கு இல்லை என்ற கருத்தினை 'வகை. . . இன்றி' என்ற தொடர்பு புலப்படுத்திற்று. வகையும் மானமும் பகையும் இன்றி எனக் கூட்டிப் பொருள் கொள்க. வகைதல் - ஆராய்தல். 'நகர் நீ தவிர்வாய்' எனவும் வகையாது தொடர்ந்து' என்ற தொடரில் 'வகையாது' என்ற சொல் 'ஆராயாமல்' என்ற பொருளில் வந்தது. மானம் - ஒப்புமை. வகையும் மானமும் பகையும் என்ற எண்ணும்மைச் சொற்கள் 'இன்றி' என்னும் வினையெச்சம் கொண்டு முடிவதாகப் பாடல் அமைந்துள்ளது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is there any total that can measure this army,
- which, without question, without equal, and without any foe
- able to stand against it and fight, rises in ranks and spreads
- and cannot be checked?' he said.
What the poem says
The chapter "Sending Out the Searchers" begins. Irāmaṉ asks Cukkirīvaṉ whether there is any figure that can express the size of this army. It is drawn up in ordered ranks, its soldiers obey without questioning, nothing compares with it, no enemy could face it, and nothing can stop it.