கம்பராமாயணம் 4539 · கிட்கிந்தா 12.2

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற'என்று
ஆற்றலாளர் அறிவின் அமைத்தது ஓர்
மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றும் ஓர்
தோற்றம் என்று இதற்கு எண்ணும் முன் சொல்லுமோ?

பொருள் · Meaning in Tamil

(அதுகேட்ட சுக்கிரீவன் இராமனை நோக்கி); ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று - (இந்த வானர சேனையின் அளவு) எழுபது வெள்ளம் என்னும் அளவால் அமைந்திருக்கின்றது என்று; ஆற்றலாளர் அறிவின் அமைந்தது - வல்லவருடைய அறிவினால் ஆராய்ந்து கண்டதாகிய; ஓர் மாற்றம் உண்டு - ஒரு வார்த்தை உள்ளது; அது அல்லது - (அந்த வார்த்தை) அல்லாமல், இதற்கு - இச் சேனைக்கு; மற்றும் ஓர் தோற்றம் என்று - வேறான ஒரு முடிவெல்லையுண்டு என்று; எண்ணி முன் சொல்லுமோ - ஆராய்ந்து சொல்ல இயலுமோ? (இயலாது.

இச் சேனையின் தொகுதி பற்றிப் பெரியோர் எழுபது வெள்ளம் என்று கூறியதை உடன்படவேண்டும்; மாறாக யாராலும் இவ்வளவென்று கணக்கிட்டுக் கூறுவது எவ்வாற்றாலும் இயலாது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"The assembled floods number seventy":
  2. there is such a saying, settled by the understanding of capable men;
  3. apart from that, can anyone reckon and declare
  4. some other measure for it?'

What the poem says

Cukkirīvaṉ answers that knowledgeable people have put the army at seventy veḷḷams, a veḷḷam being an enormous traditional unit of reckoning, literally a "flood". Beyond accepting that figure, no one could work out any other measure for so vast a force.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēṟṟa veḷḷam eḻupatiṉ iṟṟa' eṉṟu
āṟṟalāḷar aṟiviṉ amaintatu ōr
māṟṟam uṇṭu; atu allatu, maṟṟum ōr
tōṟṟam eṉṟu itaṟku eṇṇi muṉ collumō?