கம்பராமாயணம் 4541 · கிட்கிந்தா 12.4

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று உரைத்த எரிகதிர் மைந்தனை
வென்றி வில் கை இராமன் விருப்பினால்
நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான்.

பொருள் · Meaning in Tamil

என்று உரைத்த - என்று கூறிய; எரி கதிர் மைந்தனை - வெப்பமான கதிர்களையுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை; வென்றி விற்கை இராமன் - வெற்றியைத் தரும் கோதண்டம் என்னும் வில்லைத் தாங்கிய இராமன்; விருப்பினால் - அன்புடன் (நோக்கி); இனி நின்று பல பேசி என்னோ - இப்பொழுது (வீணே காலங் கழியுமாறு) பலபடப் பேசுவதால் வரும் பயன் யாது? நெறி சென்று இழைப்பன - முறையாகச் செயலாற்றும் வழியை மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைக் குறித்து; சிந்தனை செய்க - ஆலோசனை செய்க; என்றான் - என்று சொன்னான்.

வென்றி விற்கை இராமன்: எப்பொழுதும் வெற்றியே அல்லாமல் தோல்வியையறியாத கோதண்டத்தை ஏந்தியவன். எரிகதிர்- வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. சூரியனைக் குறித்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the son of the blazing-rayed Sun who had spoken thus,
  2. Irāmaṉ, with the victorious bow in his hand, said with affection,
  3. 'What use is it to stand here now and talk of many things? Consider
  4. what must be done by going about it in the proper way.'

What the poem says

Irāmaṉ, holding his ever-victorious bow Kōtaṇṭam, gently tells Cukkirīvaṉ that there is no point in talking further about the army's size. It is time to plan how to set about the search in the right way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraitta eṟikatir maintaṉai
veṉṟi viṟ kai irāmaṉ viruppiṉāl
niṉṟu iṉip pala pēci eṉṉō? neṟi
ceṉṟu iḻaippaṉa cintaṉai ceyka eṉṟāṉ.