கம்பராமாயணம் 4542 · கிட்கிந்தா 12.5

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவனும் - அந்தச் சுக்கிரீவனும்; அண்ணல் அனுமனை - பெருமையில் சிறந்த அனுமனை (நோக்கி); ஐய - ஐயனே! நீ -, புவனம் மூன்றும் - மூவுலகத்திலும்; நின் தாதையின் - உன் தந்தையாகிய வாயுவைப் போல; புக்கு உழல் - புகுந்து செல்கின்ற; தவன வேகத்தை - (உனது) மிக்க வேகத்தை, ஓர்கிலை - உணரமாட்டாமல்; தாழ்த்தனை - வீணே தாமதித்திருக்கின்றாய்; கவன மாக் குரங்கின் - விரைந்து செல்லக்கூடிய பெரிய குரங்குகளின்; செயல் காண்டியோ - ஆற்றல் மிக்க செய்கையைக் காண விரும்புகின்றாயோ?

மூவுலகத்திலும் இயங்கும் வல்லமை பெற்றிருந்தும் நீ இப்போது சீதையை நாடிச் செய்தி தெரிந்து வராமல் வீணே நாள் கடத்துவது, மற்றை வானரர்கள் சீதையைத் தேடும் திறத்தில் என்ன செய்கின்றார்கள் என்று காணக் கருதுகிறாய் போலும் எனச் சுக்கிரீவன் அனுமனை நோக்கிக் கூறினான் என்பது,

தவன வேகம் - ஒருபொருட் பன்மொழி. வேகத்தை வவ உடைய நீ) - முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And he said to the noble Aṉumaṉ: 'Sir, you
  2. have the burning speed to enter and roam the three worlds like your father;
  3. you have not considered it, and have delayed;
  4. are you waiting to watch what the swift great monkeys will do?'

What the poem says

Cukkirīvaṉ turns to Aṉumaṉ. Like his father the Wind, Aṉumaṉ can speed through all three worlds, yet he has not used that power and has let time slip by. Teasingly, the king asks whether he is waiting to see what the other monkeys can manage first. The rebuke is really a spur, preparing to give Aṉumaṉ the most important mission.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avaṉum aṇṇal aṉumaṉai 'aiya! nī
puvaṉam mūṉṟum niṉ tātaiyiṉ pukku uḻal
tavaṉa vēkattai; ōrkilai tāḻttaṉai;
kavaṉa māk kuraṅkiṉ ceyal kāṇṭiyō?