கம்பராமாயணம் 4544 · கிட்கிந்தா 12.7

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராவணன் சேண் நகர் - இராவணனுடைய நீண்ட பெரிய இலங்காபுரி; தென்திசைக்கண் - தெற்குத் திசையில் (உள்ளது); என்று - என்று; என் அறிவு இன்னணம் இசைக்கின்றது - எனது நினைவு இவ்வாறு உணர்த்துகின்றது; மாருதி - அனுமனே! இனி வன் திசைக்கு - இப்போது வலிய அந்தத் திசைக்குச் (சென்று); வென்று - அங்குள்ள அரக்கரை வெற்றி கொண்டு; இசைக்கு உரியார் - புகழ் பெறத் தகுதியுள்ளவர்; நீ அலால் பிறர் வேண்டுமோ - நீ ஒருவனே யல்லாமல் வேறொருவரும் வேண்டுமோ?

'இராவணன் நகராகிய இலங்கை தென் திசையிலிருப்பதாக எனக்கு நினைவு; நீ ஒருவனே அத் தென்திசைக்குச் சென்று இராவணனது இலங்கையைக் கண்டு அங்குள்ள அரக்கரை வென்று சீதையின் செய்தியை அறிந்து வந்து சொல்லிப் புகழ் பெறுவதற்குத் தகுதியுடையாய்' என்று சுக்கிரீவன் அனுமனிடம் கூறினான்.

இன்னணம் - (இன்னவண்ணம்) தொகுத்தல் விகாரம். எல்லாவுயிர்களையும் கவரும் யமன் திசையானதாலும், வீரம் மிக்க இராவணன் அங்கு ஆட்சி புரிவதாலும் தென்திசை வன்திசை எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My mind tells me this: that Irāvaṇaṉ's distant city
  2. lies in the southern quarter;
  3. for that harsh quarter now, Māruti, other than you,
  4. is anyone else needed who is fit to conquer and win fame?'

What the poem says

Cukkirīvaṉ recalls that Irāvaṇaṉ's city, Ilaṅkai, lies to the south. That is the "harsh direction", the quarter of Yama, god of death, and the domain of the mighty demon king. Only Aṉumaṉ is fit to go there, overcome the demons, find news of Cītai and win glory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'teṉ ticaikkaṇ irāvaṇaṉ cēṇ nakar
eṉṟu icaikkiṉṟatu eṉ aṟivu iṉṉaṇam;
vaṉ ticaikku iṉi māruti nī alāl
veṉṟu icaikku uriyār piṟar vēṇṭumō?