கம்பராமாயணம் 4546 · கிட்கிந்தா 12.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாரை மைந்தனும் - தாரையின் மகனான அங்கதனும்; சாம்பனும் - (கரடிகளுக்கு அரசனான) சாம்பவானும்; முதல் வீரர் யாவரும் - முதலாகிய வீரர் பலரும்; மேம்படும் மேன்மையால் - மிகுந்த பெருமையோடு; நின்னொடும் சேர்க - உன்னுடன் வரட்டும்; வெள்ளம் இரண்டொடும் - இரண்டு வெள்ளம் என்னும் அளவுடனே; திண் திறல் சேனைகள் - மிக்க வலிமையுள்ள சேனைகள்; பெற்றியால் பேர்க - பெருமையோடு (உங்களுக்கு உதவியாகப்) புறப்படட்டும் (எனக்கூறி)
அங்கதன், சாம்பவான் ஆகியோரோடும், இரண்டு வெள்ளம் வானர சேனையோடும் புறப்பட்டுச் சீதையைத் தேட நீ தென்திசை செல்வாயெனச் சுக்கிரீவன் அனுமனுக்கு ஆணையிட்டான் என்பது. திண்திறல்: ஒரு பொருட்பன்மொழி. தாம் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Tārai's son and Cāmpaṉ, and all the heroes
- headed by them, in their surpassing excellence,
- shall go with you'; and an army of firm strength
- of two veḷḷams set out, as was fitting.
What the poem says
Cukkirīvaṉ assigns Aṉumaṉ's companions for the southern search: Aṅkataṉ, son of Tārai, Cāmpaṉ the bear king, and other leading heroes, together with an army of two veḷḷams. This is the expedition that will eventually reach the sea and lead Aṉumaṉ to Ilaṅkai.