கம்பராமாயணம் 4548 · கிட்கிந்தா 12.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சுக்கிரீவன் இடபன் முதலான வானர வீரர்களை நோக்கிக்); கொற்ற வாகையினீர் - வெற்றிக்கான வாகைமாலையை அணிவதற்கு உரியவர்களே! வெற்றி வானரம் வெள்ளம் இரண்டொடும் - (நீங்கள்) வெற்றி பெறும் தன்மையுள்ள இரண்டு வெள்ளம் வானர சேனையோடும்; சுற்றி ஓடித்துருவி - (பல இடங்களில்) அலைந்து திரிந்து (சீதையைத்) தேடி; ஒரு மதி முற்றுறாதமுன் - ஒரு திங்கள் கழிவதற்குள்ளே; இவ் இடை முற்றுதிர் - இங்கே திரும்பி வந்து சேருங்கள்; எனக் கூறினான் - எனச் சொல்லினான்.
நீங்கள் தனித் தனியே இரண்டு வெள்ளம் வானரப் படையோடு நான் உங்களுக்குக் குறித்த திசைகளுக்குச் சென்று சீதையைத் தேடி ஒரு திங்களுக்குள் இங்கு வந்து சேரவேண்டுமென்று சுக்கிரீவன் ஆணையிட்டான் என்பது. வாகை -ஆகுபெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With two veḷḷams of victorious monkeys each,
- run all around and search, and before one month
- is complete, come back here,
- you who wear the garland of victory,' he said.
What the poem says
Cukkirīvaṉ sets the terms of the search. Each commander is to take two veḷḷams of monkeys, scour his assigned quarter thoroughly, and return within one month. He addresses them as wearers of the vākai garland, the traditional garland of victory.