கம்பராமாயணம் 4549 · கிட்கிந்தா 12.12

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(தென் திசைக்குச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன்); ஈண்டு நின்று எழுந்து - (நீங்கள்) இங்கிருந்து புறப்பட்டு; எழில் தூண்டு சோதி - அழகு மிகுந்து ஒளி வீசுகின்ற; ஈர் ஐந்து நூறு கொடு முடி தோன்றலால் - ஆயிரஞ் சிகரங்கள் காணப்படுவதால்; நீண்ட நேமி கொல் ஆம் என - பெரிய வடிவு கொண்ட திருமால்தானோ என்று; நேர் தொழவேண்டும் - எதிரே சென்று தொழுவதற்குரிய; விந்த மலையினை - விந்திய மலையை, மேவுவீர்- முதலிலே சென்று சேருங்கள்.

ஆயிரங் கொடுமுடிகளையுடைய விந்திய மலைக்கு ஆயிரம் முடிகளையுடைய திருமாலை உவமையாக்கினார் நேமி - ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Setting out from here, because its twice five hundred
  2. peaks shine with beautiful radiance,
  3. so that one wonders whether it is the vast Lord of the discus and must bow to it,
  4. you will reach the Vindhya mountain.'

What the poem says

Cukkirīvaṉ now describes the route south. The first landmark is the Vindhya range. Its thousand shining peaks make it look like Vishnu, the Lord who bears the discus, in his cosmic form with a thousand heads, so that travellers feel they should bow to it. This begins a long route description, as in Vālmīki, that the next several verses continue.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'īṇṭuniṉṟu eḻuntu īr aintu nūṟu eḻil
tūṇṭu cōtik koṭu muṭi tōṉṟalāl
nīṇṭa nēmi kolām eṉa nēr toḻa
vēṇṭum vintamalaiyiṉai mēvuvīr.