கம்பராமாயணம் 4551 · கிட்கிந்தா 12.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அங்கிருந்து) வாம மேகலை வானவர் மங்கையர் - அழகிய மேகலையணிந்த தேவ மாதர்கள்; காம ஊசல் - விருப்பத்தோடு ஊஞ்சல் ஆடும்போது; களி இசைக் கள்ளினால் - மகிழ்ச்சியால் பாடுகின்ற இசையாகிய மதுவால்; தூம மேனி அசுணம் - புகை போன்ற கரிய நிறமுடைய அசுணமாப் பறவைகள்; துயில்வுறும் - தூங்குவதற்கு இடமான; ஏம கூடம் எனும் மலை எய்துவீர் - ஏமகூடம் என்னும் மலையைப் போய்ச் சேருங்கள்.
ஏமகூட மலையில் தேவமாதர்கள் வந்து ஊஞ்சலாடும்போது களிப்பினால் பாடுகின்ற இசைப் பாடலால் அசுணப் பறவை தூங்கும் என்பது. அசுணம் - இசையுணர்வுடைய பறவை; விலங்கு என்றும் கூறுவர் அரமங்கையர்: மரூஉ. (அமர மங்கையர்). ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. வாமம் - அழகு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Where, from the intoxicating songs the celestial women
- with lovely girdles sing in their joy as they swing on swings for pleasure,
- the smoke-coloured acuṇam birds fall asleep:
- you will reach the mountain called Ēmakūṭam.'
What the poem says
The next landmark is Mount Ēmakūṭam (Hemakūṭa), one of the eight great mountains of the world. There celestial women in beautiful girdles swing for pleasure and sing, and their songs are so sweet that the dusky acuṇam, a creature of Tamil poetic tradition said to be enchanted by music, falls asleep listening.