கம்பராமாயணம் 4553 · கிட்கிந்தா 12.16

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தாங்கும் ஆர் அகில் தருவளர் சந்தனம்
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல் என
நீங்கி நாடு நெடியன பிற்படத்
தேங்கு வார்புனல் தண்டகம் சேர்திரால்.

பொருள் · Meaning in Tamil

தாங்கும் - நறுமணத்தைக் கொண்ட, ஆர் அகில் - ஆத்தியும் அகில் மரங்களும்; தண் நறுஞ் சந்தனம் - குளிர்ந்த நறுமணமுள்ள சந்தனமரங்களும் (ஆகியவற்றை); வீங்கு வேலி - விரிந்த வேலியாகக் கொண்ட, விதர்ப்பமும் - விதர்ப்ப நாட்டையும்; மெல்லென நீங்கி - மெதுவாகக் கடந்து; நெடியன நாடு பிற்பட - பல காதம் நீண்ட பல நாடுகளும் உங்களுக்குப் பின்னாகுமாறு; தேங்கு வார்புனல் - மிக்க நீர் நிறைந்து; தண்டகம் சேர்திர் - தண்டகாரணியத்தைச் சென்று அடைவீர்

விதர்ப்ப நாட்டைச் சுற்றி வேலியாக அகில் மரங்களும், சந்தன மரங்களும் நிறைந்திருக்குமென்பது, தேங்குதல் - நிறைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Passing gently through Vidarbha too, whose broad hedge
  2. is fragrant ār and agil and cool sweet sandal,
  3. with long stretches of country left behind you,
  4. you will reach the Daṇḍaka forest, brimming with flowing water.'

What the poem says

The route continues through the land of Vidarbha, fenced around with fragrant trees: ār, eaglewood and sandal. After passing many more long tracts of country, the searchers will come to the well-watered Daṇḍaka forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāṅkum ār akil taṇ naṟuñ cantaṉam
vīṅku vēli vitarppamum melleṉa
nīṅki nāṭu neṭiyaṉa piṟpaṭa
tēṅkuvār puṉal taṇṭakam cērtirāl.