கம்பராமாயணம் 4554 · கிட்கிந்தா 12.17

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முண்டகத் துறை என்று - (அதன் பின்பு) முண்டகத் துறையென்று கூறப்படுகின்ற; ஒரு மொய் பொழில் - மரங்கள் அடர்ந்த ஒரு சோலையானது; பண்டு அகத்தியன் வைகியதாப் பகர் - பழங்காலத்து அகத்திய முனிவர் வசித்ததாகக் கூறப்படுகின்ற; தண்டகத்தது - தண்டகாரணியத்திலுள்ளது; தாபதர்தம்மை உள் கண்டு - தவஞ்செய்யும் முனிவர்களைத் தம் மனத்திற் காண்பதால்; அகத் துயர் தீர்வது - தங்கள் மனத் துன்பத்தை நீக்குவதற்குக் காரணமாயிருப்பது; காண்டிர் - (அதனைச் சென்று காணுங்கள்.

அகத்தியர் வசிக்கின்ற தண்டகாரணியத்திலுள்ளதும், வழிபட்ட மாத்திரத்தில் அவர்களின் மனத் துன்பத்தை மாற்றும் பெருமை வாய்ந்த முனிவர்கள் நிரம்பியிருக்கப் பெற்றதுமாகிய முண்டகத் துறையைச் சென்று காணுங்கள் என்பது. தாபதர்- தவம் செய்பவர் முண்டகத் துறை: தாமரை நிரம்பிய நீர்நிலை - சோலைக்கு ஆயிற்று அகத்தியர் தண்டக வனத்தும், பொதிய மலையிலும் தென்னாட்டில் பல இடங்களிலும் இருந்ததாக வரலாறு உண்டு. கம்பராமாயணத்தில் 2005, 4477 ஆகிய பிற பாடல்களிலும் அகத்தியர் உறைவிடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இப்பாடலில் முன்பு அகத்தியர் இருந்ததாகக் குறிப்பிடுவதும், பொதிகையை 'என்றும் அவன் உறைவிடமாம்' (4477) என்று குறிப்பிடுவதும் கருதத்தக்கன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In the Daṇḍaka, where Akattiyaṉ is said to have lived of old,
  2. is a dense grove called Muṇṭakattuṟai,
  3. where, by beholding the ascetics within, one's inner sorrow ends;
  4. you will see it.'

What the poem says

Within the Daṇḍaka forest, where the sage Akattiyaṉ (Agastya) once lived, lies a thick grove called Muṇṭakattuṟai, "the lotus ford". It is full of ascetics, and simply seeing them takes away the sorrows of the heart. Tradition places Akattiyaṉ in the Daṇḍaka and later on the Potiyil mountain in the far south, which the poet mentions elsewhere as his lasting home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṭu akattiyaṉ vaikiyatāp pakar
taṇṭakattatu tāpatartammai uḷ
kaṇṭu akat tuyar tīrvatu kāṇṭirāl
muṇṭakattuṟai eṉṟu oru moy poḻil.