கம்பராமாயணம் 4555 · கிட்கிந்தா 12.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூம்பொழில் - மலர்கள் நிறைந்த (முண்டகத்துறை என்னும்) அச் சோலையானது; ஞாலம் நுங்குறும் - உலகத்தவரால் அனுபவிக்கப் படுகிற, நல் அறத்தோர் பொருள் போல - சிறந்த தரும சிந்தையுள்ளவர்களின் செல்வம் போல; நின்று பொலிவது - நிலைபெற்று விளங்குவது; சீல மங்கையர் வாய் என - நல்லொழுக்கமுடைய மாதர்களின் வாயிதழ் போன்று; தீம் கனி - இனிய பழங்கள்; காலம் இன்றிக் கனிவது - (இன்ன காலமென்று இல்லாது) எந்தக் காலத்திலும் பழுக்கப் பெறுவது; காண்டிர் - (அதனைச் சென்று காணுங்கள்.
இம் முண்டகத்துறைக் கண்ணுள்ள மரங்களெல்லாம் சிறந்த பயன்மரங்கள் என்பதும், எந்தக்காலத்தும் மாறாது இனிய கனி தருவன என்பதும் குறிக்கப் பெற்றன.
ஞாலம் - இடவாகுபெயர். சிறந்த அறச் சிந்தனையுள்ளவர்களின் செல்வம் பெருகி உலகத்துள்ளார்க்கும் பயன்படும். கனிபோன்ற வாய் என்னாமல் மகளிர் வாய் போன்ற கனி என்றது எதிர்நிலையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That flowering grove stands and flourishes like the wealth
- of the truly righteous, which the whole world enjoys;
- like the lips of virtuous women, its sweet fruit
- ripens without regard to season; you will see it.'
What the poem says
The grove of Muṇṭakattuṟai flourishes like the wealth of good people, which everyone in the world shares and enjoys. Its trees bear sweet fruit in every season, ripe like the lips of virtuous women. The poet reverses the usual comparison: instead of lips like fruit, he gives fruit like lips.