கம்பராமாயணம் 4557 · கிட்கிந்தா 12.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்டு இறந்தபின் - அந்தப் பொழிலைக் கடந்த பின்பு: அந்தரத்து இந்துவைத் தீண்டுகின்றது - ஆகாயத்தில் மதியைத் தொடுவதும்; செங் கதிர்ச் செல்வனும் - சிவந்த கிரணங்களைச் செல்வமாக வுடைய சூரியனும்; ஈண்டு உறைந்து அலது - இம் மலையில் தங்காமல்; ஏகலம் என்பது - அப்பால் செல்லமாட்டோம் என்று நினைத்தற்கு இடமானதுமாகிய; பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் - பாண்டு மலை என்னும் மலையயுள்ளது) (அதைச் சென்றடையுங்கள்,)
பாண்டுமலை மிகவுயர்ந்து மிக இனிமையான இடமாயிருத்தலால் கதிரவனும் அங்கே தங்கி அப்பாற் செல்லக் கருதுகின்றான் என்பது. பருப்பதம் - பர்வதம் என்ற வடசொல் திரிபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Once past there, there is a peak that touches the moon in the sky,
- where even the Sun, lord of red rays, says, "We will not go on
- without staying here a while":
- the mountain called the mountain of Pāṇṭu.'
What the poem says
Beyond the grove lies Mount Pāṇṭu, so high it touches the moon, and so lovely that even the Sun feels he cannot pass without stopping to rest there. The searchers are to make for it next.