கம்பராமாயணம் 4606 · கிட்கிந்தா 12.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூழி மால் யானையின் - முகபடாமணிந்த மதம் பிடித்த ஆண் யானையினது; துணை மருப்பு இணையென - ஒன்றோடு ஒன்று ஒத்து விளங்கும் இரண்டு தந்தங்கள் என்று கூறும்படி; கேழ் இலா - (அவற்றிற்கு) ஒப்பாகாத; வனம் முலைக்கிரி - அழகிய முலைகளாகிய மலைகளை; சுமந்து - தாங்கி; இடைவது - (பாரத்தைப் பொறுக்க முடியாமல்) ஒடிவதாகிய; ஓர் வானமின் இளங்கொடியின் - ஒப்பற்ற வானத்திலுள்ள மின்னலின் இளங்கொடி போல; வந்தாளை - வந்தவளாகிய சீதையை; அன்று - அக் காலத்தில்; ஆழியான் அரசவைக் கண்டதும் - ஆணைச் சக்கரமுடைய சனக மன்னனது சபையில் பார்த்ததையும்; அறைகுவாய் - சொல்வாய்.
முலைக் கிரியைச் சுமக்கும் மின்னிளங் கொடி சீதைக்கு, இல்பொருளுவமை. சூழி: யானையின் முகத்திடும் அணி. வாழி - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bearing, as if they were the matched pair of tusks of a great elephant in its face-cloth,
- the hills of her lovely breasts, which have no equal, her waist giving way beneath them, a
- young creeper of lightning from the sky, so she came; that on that day
- I saw her in the court of the lord of the wheel of rule, tell her that.
What the poem says
The third token is the day Cītai was brought into the assembly hall of her father Caṉakaṉ, whose wheel of royal command ran everywhere, after the bow was broken. She came like a young streak of lightning bending under a weight it could not bear.
The comparison is to something that does not exist in nature, lightning carrying hills, which the commentary names as an imaginary simile.