கம்பராமாயணம் 4608 · கிட்கிந்தா 12.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆனபேர் அரசு இழந்து - உனக்குரிய பெரிய அரசை விட்டு; அடவி சேர்வாய் - காட்டிற்குச் செல்பவனே! இனி - இனிமேல்; யான் அலாதன எலாம் - என்னைத் தவிர மற்றப் பொருள்கள் யாவும்; உனக்கு இனியவோ - உனக்கு இன்பம் தருவனவோ? (என்னொருத்தியால் மட்டும் உனக்குத் துன்பமேற; எனா - என்று (என்னை நோக்கிக்) கடுமையாகக் கூறி (சீதை), மீன் உலாம் - மீன்கள்போலப் பிறழ்வனவும்; நெடுமலர்க் கண்கள் - பெரிய தாமரைமலரை ஒப்பனவுமாகிய கண்களில்; நீர் விழ விழுந்து - நீர் பெருகக் கண்ணீர் சிந்தி; ஊன் இலா உயிரின் - உடலில் நில்லாது தவிக்கின்ற உயிர் போல; வெந்து அயர்வதும் - மிகவும் தளர்ந்து சோர்ந்ததையும்; உரை செய்வாய் - (நீ அவளிடம் சொல்வாய்.
இராமன் வனவாசஞ்செய்யப் புறப்படுகின்ற நேரத்தில் சீதையிடம், 'நீ என்னோடு வருவாயானால் என் துன்பத்திற்குக் காரணமாவாய்' என்று கூற, அது கேட்டுச் சீதை மிகவும் வருந்தி 'என் துறந்தபின் இன்பம் கொலாம் என்றாள்' (1833) எனக் கூறியதைக் குறிக்கிறான். அயர்வது: காலவழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You who give up the great kingdom that is yours and go to the forest, are all things
- but me to be sweet to you from now on?" she said, and
- as tears fell from her long, flower-like eyes where fish seem to dart, she fell,
- burned and fainted like a life without a body: tell her that.
What the poem says
The fifth token is Cītai's reply. Wounded, she asked whether everything in the world except her would bring him happiness now that he was leaving his kingdom for the forest.
Weeping, she collapsed, scorched with grief, like a soul with no body to rest in. Irāmaṉ asks Aṉumaṉ to recall this scene to her, a moment only the two of them knew.