கம்பராமாயணம் 4627 · கிட்கிந்தா 13.16

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனையது நோக்கினார்'ஆம்; இது ஆம் அயில்
வினையினன் இராவணன் இருக்கும் வெற்பு'எனும்
நினைவினர் உவந்து உவந்து ஓங்கும் நெஞ்சினர்
சினம் மிகக் கனல்பொறி சிந்தும் செங்கணார்.

பொருள் · Meaning in Tamil

(வானரர்) அனையது நோக்கினார் - அந்த ஏமகூட மலையைக்கண்டு; அமிர்த மாமயில் இனைய - அமிழ்தத்தை ஒத்த பெருமை மிக்க மயில் போல்வாளாகிய சீதை துயருறும் படி; வேல் இராவணன் - கூர்மையான வேலினையுடைய இராவணன்; இருக்கும் வெற்பு ஆம் - தங்கியுள்ள மலையாகும்; எனும் - என்று கருதுகின்ற; நினைவினர் - எண்ணமுடையவர்களாய்; உவந்து உயர்ந்து ஓங்கு நெஞ்சினர் - (அது குறித்து) மகிழ்ந்து பொங்கி வளர்கின்ற மனமுடையவர்களாய், சினம் மிகக் கனல்பொறி சிந்தும் செங்கணார் - கோபம் அதிகப்படுவதால் தீப்பொறிகளைக் கக்கும் செந்நிறக் கண்களையுடையவர்களுமானார்கள்.

வானரர்கள், அம் மலையின் வளத்தைக் கண்டு அதை இராவணனது இருப்பிடமாகக் கருதி, விரைவில் சீதையைக் காணலாம் என்பதனால் மனப் பூரிப்பையும், சீதையைக் கவர்ந்த கொடுஞ் செயலினனான இராவணனது தன்மையை நினைத்ததால் தோன்றிய பெருஞ்சினத்தையும் ஒருங்கே கொண்டனர் என்பது.

ஏமகூடத்தையே திரிகூடமென மயங்கினர் வானர வீரர் ஒரே காலத்தில் முரண்படும் இருவகை உணர்ச்சிகள் டது தகம் உணர்த்துகிறது. உயர்ந்து ஓங்கு : ஒரு பொருட் பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at it, 'So that the great peacock, sweet as nectar,
  2. may grieve, this is the mountain where Irāvaṇaṉ of the spear lives': with that
  3. thought, their hearts rose up high with gladness,
  4. and their red eyes, as their anger grew, scattered sparks of fire.

What the poem says

Dazzled by the mountain's wealth, the monkeys mistake Ēmakūṭam for Tirikūṭam, the mountain on which Irāvaṇaṉ's city of Ilaṅkai stands.

Two opposite feelings seize them at once: joy that they will soon find Cītai, gentle as a peacock and precious as nectar, and fury at the thought of the demon who carried her off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyatu nōkkiṉār 'amirta mā mayil
iṉaiya vēl irāvaṇaṉ irukkum veṟpu' eṉum
niṉaiviṉar uvantu uyarntum ōṅkum neñciṉar
ciṉam mikak kaṉal poṟi cintum ceṅ kaṇār.