கம்பராமாயணம் 4630 · கிட்கிந்தா 13.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(வானரர்கள் ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று - நூறு காத அளவு அகலமுடையதாய்; உம்பரைத் தொடுவது ஒத்து - வானத்தைத் தீண்டுவது போன்று; உயர்வின் ஓங்கிய - மிகவும் உயர்ந்துள்ள; செம்பொன் நல்கிரியை - செம்பொன் மயமான அழகிய அந்த ஏமகூட மலையில்; ஓர் பகலில் தேடினார் - ஒரு பகல் முழுவதும் தேடிப் பார்த்தனர்; கொம்பினைக் கண்டிலர் - (ஆனால்) பூங்கொம்பு போன்றவர்களாகிய சீதையைக் காணாதவர்களாகி, குப்புற்று ஏகினார் - (அம் மலையிலிருந்து) இறங்கிச் சென்றார்கள்.
ஏமகூடத்தைப் புகழ்ந்து அதனைச் செம்பொன் நற்கிரியென்றார். கொம்பு : உவமவாகுபெயர் குப்புறுதல் : கீழிறங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Spreading a hundred kātams wide,
- rising so high that it seems to touch the heavens,
- that fine mountain of red gold they searched in a single day;
- they did not find the slender bough, and went back down.
What the poem says
In one day the monkeys search the whole of Ēmakūṭam, a hundred kātams across and seemingly touching the sky. Cītai, slender as a flowering bough, is not there, and they come down again.