கம்பராமாயணம் 4631 · கிட்கிந்தா 13.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அங்கதன் முதலான வானரசேனைத் தலைவர்கள்) வெள்ளம் ஓர் இரண்டு என - இரண்டு வெள்ளம் என்று சொல்லுமாறு; விரிந்த சேனையை - பரவியுள்ள தமது குரங்குச் சேனையை (பார்த்து); நீர் - நீங்கள்; தெள்ளு நீர் உலகு எலாம் - தெளிந்த நீர் சூழ்ந்த (தென்திசை) உலகனைத்திலும் அலைந்து (சீதையைத் தேடிப்பார்த்து; (பிறகு) எள் அரு மகேந்திரத்து - (தென்கடற்கரையிலுள்ள) இகழ்வதற்கரிய மகேந்திரமலையினிடத்தில்; எம்மில் கூடும் - எங்களோடும் வந்து சேருங்கள்; என்று உள்ளினார் - என்று நினைந்து கட்டளையிட்டவராகி; உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் - உயர்ந்து நீண்ட அந்த ஏமகூடத்தை விட்டு அகன்றார்கள்.
எல்லோரும் ஒருங்கே சென்று தேடப் புகுந்தால் குறித்த கெடுவுக்குள் எடுத்த செயல் முடியாதெனக் கண்டு தனித்தனித் தொகுதியாகப் பிரிந்து தேடுதல் நல்லது என்று பல பிரிவுகளாகப் பிரித்து விடுத்து அங்கதனும் அவனுடன் சிலரும் தனித்துச் சென்றனர் என்பது இங்குக் குறிக்கப்பட்டது. ஓங்கல்: மலை: காரணக்குறி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the army that spread out like two vast floods they said,
- 'Search through all the lands bounded by clear water, and
- join us on Mayēntiram, which none may scorn';
- having so resolved, they left that high, long mountain.
What the poem says
Realising that a single body of troops could not finish the search within the month, Aṅkataṉ and the other leaders split the vast army, numbered at two "floods", a huge military unit, into separate groups.
Each group is to search the southern lands on its own and meet again at Mount Mayēntiram on the southern coast. Aṅkataṉ himself goes on with a smaller band.