கம்பராமாயணம் 4633 · கிட்கிந்தா 13.22

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புள் அடையா; விலங்கு அரிது; புல்லொடும்
கள் உடை மரன் இல; கல்லும் தீந்து உகும்;
உள்ளிடை யாவும் நுண் பொடியொடு ஓடிய
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது

பொருள் · Meaning in Tamil

அவ்வெஞ்சுரம் - அந்தக் கொடிய பாலைவனத்தில்; புள் அடையா - பறவைகள் சென்று தங்கமாட்டா; விலங்கு அரிய - மிருகங்களும் காண்பதற்கு அரியன; புல்லொடும் கள் அடை மரன் இல - புல்லும் தேன் பொதிந்த மலருடை மரங்களும் அடியோடு இல்லை; கல்லும் தீந்து உகும் - கற்களும் எரிந்து சாம்பலாகிவிடும்; உள் இடை யாவும் - தன்னிடம் பொருந்திய எல்லாப் பொருள்களும்; நுண் பொடியொடு ஓடிய - சிறு துகள்களாக மாறிப் பறப்பதால்; வெள்ளிடை அல்லது - வெற்றிடமல்லது; ஒன்று அரியது - வேறொன்றும் அங்குக் காணப்படாது.

அந்தப் பாலைவனத்தில் பறவை முதலியன வருவதுமில்லை; மரஞ்செடி கொடிகளும் வளர்வதுமில்லை; கற்களும் கரிந்து தீய்ந்து போகும்; குறிஞ்சி முதலிய வேற்று நிலங்களிலிருந்து எப்பொருள் வந்தாலும் அவை யாவும் துகளாகப் பறக்கின்ற வெப்பம் நிறைந்த வெற்றிடமாகவேயுள்ளது என்ற அப் பாலைவனத்தின் கொடுமை கூறியவாறு. வெள்ளிடை : வெற்றிடம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Birds do not alight there; beasts are rarely seen; there is no grass,
  2. nor any tree with honeyed flowers; even the stones burn and crumble;
  3. everything within it is ground into fine dust and blown away,
  4. so that nothing is there but empty space.

What the poem says

The desert is utterly barren: no birds settle there, hardly any animals are seen, no grass or flowering trees grow, and even the rocks are scorched to ash.

Anything that comes into it from other kinds of land is reduced to dust and blown away, leaving only a burning emptiness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puḷ aṭaiyā; vilaṅku ariya; pulloṭum
kaḷ aṭai maraṉ ila; kallum tīntu ukum;
uḷ iṭai yāvum nuṇ poṭiyoṭu ōṭiya
veḷḷiṭai allatu oṉṟu aritu