கம்பராமாயணம் 4634 · கிட்கிந்தா 13.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நன்புலன் நடுக்குற - (அங்கே சென்ற வானர வீரர்கள்) நல்ல ஐம்பொறிகளும் நடுங்கவும்; உணர்வு நைந்து அற - அறிவு தேய்ந்து ஒழியவும்; பொன் பொலியாக்கைகள் - பொன் போல விளங்கும் உடல்கள்; புழுங்கிப் பொங்குவார் - வியர்த்து மனம் கொதிப்பவர்களாய்; தென்புலம் தங்கு - தெற்குத் திசையில் இருக்கின்ற; எரி நரகில் - (எமனது) எரியும் நரகத்தில்; சிந்திய - விழுந்து வருந்துகின்ற, என்பு இல் பல் உயிர் என - (எலும்பில்லாத உடம்பையுடைய) புழு முதலான பல உயிர்த்தொகுதிகளைப் போல; வெம்மை எய்தினார் - கொதிப்பையடைந்தார்கள்.
அங்கே சென்ற வானரர்கள் நிலத்தின் வெம்மையைப் பொறுக்க முடியாமல் புழுத்துடிப்பதுபோலத் துடித்தார்கள் என்பது. வானரர்கள் வெயிலில் துடிப்பதற்கு என்பு இல் பல்லுயிர் துன்பப்படுவதை உவமை கூறினார். தென்புலத்தவன்: எமன். என்பு இல் பல் உயிர்: புழுக்கள். 'என்பிலதனை வெயில்போலக்காயுமே' - குறள்: 77
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their good senses trembling, their wits worn away,
- their bodies, bright as gold, sweating and seething,
- like the many boneless creatures cast into the burning hell
- that lies in the southern realm, they suffered the scorching heat.
What the poem says
The monkeys' senses reel and their minds fail in the heat. They writhe like worms and other boneless creatures thrown into the fiery hell of Yamaṉ, the lord of death, whose realm lies to the south.
The image of the sun burning a boneless worm echoes a couplet of the Tirukkuṟaḷ (77).