கம்பராமாயணம் 4635 · கிட்கிந்தா 13.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீட்டிய நாவினர் - (அந்த வானரர்கள் நீர் வேட்கையால்) வெளியே தொங்கிய நாக்கையுடையவர்களாயினர்; நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய - நிலத்தில் அடிவைக்கும் தோறும் கீழிருந்து தாக்கிய; வெம்மையால் - வெப்பத்தால்; உலையும் காலினர் - கொப்புளம் கண்ட அடிகளையுடையவர்களுமாயினர் காட்டினும் காய்ந்து - அப் பாலைவனத்தைக் காட்டிலும் மிகுதியாகச் சூடேறி, தம் காயம் தீதலால் - தங்கள் உடம்பு கரிந்து தீய்ந்ததால்; சூட்டுஅகல்மேல் எழு பொரியின் - சூடு கொண்ட சட்டியிலிருந்து மேலெழுகின்ற நெற்பொரிகள் போல; துள்ளினார் - துடித்தார்கள்.
மிகுந்த நீர் வேட்கையால் நாவை வெளியே நீட்டுதலும், பொறுக்கமுடியாத மிக்க வெப்பத்தால் கால்கள் கொப்புளித்தலும் இயல்பு. நெருப்பினால் வெம்மையடைந்த சட்டியில் நெல் பொரிந்து மேலெழுவதுபோல வானரவீரர்கள் பாலைவனத்தின் மிக்க வெம்மையால் துடித்தார்கள் என்பது உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their tongues hung out; each time their feet touched the ground,
- they blistered with the heat that it poured into them;
- hotter even than the wasteland, their bodies scorching,
- they leapt like grains of paddy popping on a heated pan.
What the poem says
Parched with thirst, the monkeys hang out their tongues, and every step on the burning ground blisters their feet. Their bodies grow hotter than the desert itself.
They hop about like rice grains bursting and jumping in a hot pan, a homely simile for their agony.