கம்பராமாயணம் 4636 · கிட்கிந்தா 13.25

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவில் பீழையார்
பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார் பல
விதங்களால் நெடும்பில வழியின் மேவினார்.

பொருள் · Meaning in Tamil

(வானர வீரர்) ஒதுங்கலாம் நிழல் இறை காண்கிலாது - (வெயிலுக்கு) ஒதுங்கக் கூடிய சிறிதளவு நிழலைக்கூடக் காணமாட்டாது; உயிர் பிதுங்கல் ஆம் உடலினர் - உயிர் வெளியேறக் கூடிய உடலையுடையவர்களும், முடிவு இல் பீழையார் - எல்லையற்றதுன்பத்தையடைந்தவர்களும்; பதங்கள் தீப்பருகிடப் பதைக்கின்றார் - அடிகளில் (அப் பாலைவனத்தில் சூடு தாக்குவதால் துடிதுடிக்கின்றவர்களுமாய்; பல விதங்களால் - (அந்த வெப்பத்திலிருந்து தப்புவதற்குப்) பல வகையிலும் முயற்சி செய்து முடிவாக; நெடும் பில வழியில் - (அங்கே இருந்த) பெரிய பிலத் துவாரத்தின் வழியை; மேவினார் - அடைந்தார்கள்.

வானரவீரர்கள் அந்தப் பாலைவனத்தில் ஒதுங்கித் தப்புவதற்குச் சிறு நிழல் கூட அகப்படாமல் உயிர் நீங்கும் நிலையையடைந்து, முடிவாக அங்கே காணப்பட்ட ஒரு பிலத்தின் வழியைச் சேர்ந்தனர் என்பது. பீழை: துன்பம் பிதுங்கல்: வெளிப்படல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Finding not even a little shade to shelter in, their bodies
  2. near to bursting with the life ready to leave them, in endless pain,
  3. writhing as the fire drank at their feet, after trying in many
  4. ways, they came upon the way into a great cavern.

What the poem says

With not a scrap of shade anywhere, the monkeys are close to death, their feet seared by the burning ground. After trying every way to escape the heat, they come upon the mouth of a huge cave.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1otuṅkal ām niḻal iṟai kāṇkilātu uyir
pituṅkal ām uṭaliṉar muṭivu il pīḻaiyār
pataṅkaḷ tīp parukiṭap pataikkiṉṟār pala
vitaṅkaḷāl neṭum pila vaḻiyil mēviṉār.