கம்பராமாயணம் 4637 · கிட்கிந்தா 13.26

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மீச் செலவு அரிது : இனி விளியின் அல்லது;
தீச் செலவு ஒழியவும் தடுக்கும் திண் பில
வாய்ச் செலல் நன்று'என மனத்தின் எண்ணினார்;
'போய்ச் சில அறிதும்'என்று அதனில் புக்கனர்.

பொருள் · Meaning in Tamil

இனி - இனிமேல், விளியின் அல்லது - இறந்து விடுதலல்லாமல், மீச்செலவு அரிது - இதைக் கடந்து அப்பால் செல்லுதல் நமக்கு முடியாத செயலாகும்; (ஆகையால்) திண் பிலம் வாய்ச் செலல் - வலிய பிலத்தின் வழியே செல்லுதல்; தீச்செலவு ஒழியவும் தடுக்கும் - வெப்பமான பாலை நிலத்தில் செல்வதையாவது தடுக்கும்; (ஆகவே) நன்று என - (இப் பிலத்துள் செல்வதே) நல்லது என்று; மனத்தின் எண்ணினார் - மனத்திற் கருதியவர்களாய்; போய்ச் சில அறிதும் என்று - (இதனுள்) சென்று அங்குள்ள சிலவற்றை ஆராய்வோமென்று கூறி; அதனில் புக்கனர் - அப்பிலத்தினுள் புகுந்து சென்றார்கள்.

இந்தப் பாலைவனத்தில் இனி ஒரு நொடி செல்வதும் உயிரழிவுக்கே காரணமாகும்; ஆகவே, இங்கே காணப்படுகின்ற பில வழியில் சென்றால் அது சீதையிருக்கும் இடமாக இல்லாவிட்டாலுங் கூடப் பாலை நிலத்தின் வெம்மையையாவது தணிக்கும்: ஆதலால், இப்போது இங்கே செல்வதே நாம் செய்யத்தக்கது; மேலும், இதனுள்ளிருக்கும் சில இடங்களிலும் சீதையைத் தேடிப் பார்ப்போமென்று கருதி வானர வீரர்கள் அப் பிலத்தினுள் புகுந்தனர் என்பது.

திண் பிலம் - எளிதில் கடத்தற்கரிய பிலம்.

ஒழியவும் - இழிவு சிறப்பும்மை.

'ஒழிய' என்னும், செயவென்னெச்சம் தொழிற்பெயர்த் தன்மைத்தாகித் 'தடுத்தல்' தொழிற்குச் செயப்படு பொருளாய் நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To go on across the top is impossible now, except by dying;
  2. it will at least spare us walking through fire; to take this strong cavern's
  3. mouth is good,' they thought in their minds;
  4. 'let us go in and find out something,' and they entered it.

What the poem says

The monkeys reason that crossing the rest of the desert would kill them. Even if Cītai is not in the cave, going in will at least get them out of the deadly heat, and they can search inside while they are there. So they enter the cavern.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mīc cela aritu: iṉi viḷiyiṉ allatu;
tīc cela oḻiyavum taṭukkum tiṇ pila
vāyc celal naṉṟu' eṉa maṉattiṉ eṇṇiṉār;
'pōyc cila aṟitum' eṉṟu ataṉil pukkaṉar.