கம்பராமாயணம் 4638 · கிட்கிந்தா 13.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அக்கணத்து - (வானர வீரர்கள்) அப்பொழுது; அப்பிலத்து அகணி எய்தினார் - அந்தப் பிலத்தின் உள்ளிடத்தையடைந்தவர்களாய்; திக்கினொடு உலகு உற - நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தும்; செறிந்த தேங்கு இருள் - மிக நெருங்கி நிறைந்த பேரிருள்; எக்கிய கதிரவற்கு அஞ்சி - (வானத்தில்) ஏறிய சூரியனிடம் அச்சங் கொண்டு; ஏமுறப்புக்கதே அனையது - பாதுகாப்பு அடையப் புகுந்தது போலத் தோன்றுவதாகிய; ஓர்புரை - ஒரு குகையில், புக்கு எய்தினார் - புகுந்து சென்றார்கள்
வானர வீரர் பிலத்துள் புகுகையில் அதனிடையிலே இருள் செறிந்த ஒரு குகையிலே நுழைந்து செல்லலாயினர் என்பது.
அங்கு நிறைந்திருந்த இருளை, தனக்குப் பகைவனான கதிரவனுக்கு அஞ்சிப் பிலத்துள் பதுங்கியிருப்பதாகக் குறித்தது தன்மைத் தற்குறிப்பேற்றவணியாம். எக்கிய - ஏறிய (இசைச் சொல்) அகணி - உள்ளிடம், புரை: உள்ளறை, (ஏமுற): ஏழாறு:
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment they reached the inside of that cavern;
- it was as if the deep darkness that had filled the quarters and the world,
- afraid of the risen Sun, had gone in there for safety;
- into such a hollow they made their way.
What the poem says
Inside, the monkeys pass into a chamber of total darkness. The poet imagines that all the darkness of the world, terrified of its enemy the risen Sun, has fled into this cave to hide.