கம்பராமாயணம் 4639 · கிட்கிந்தா 13.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுகிலர் - (அப்பாலே செல்ல) எழுந்து புறப்படாமலும்; கால் எடுத்து ஏகும் எண் இலர் - அடிவைத்துச் செல்லும் கருத்தில்லாமலும்; வழி உளது ஆம் எனும் - அப்பாலே செல்லுவதற்குரிய வழியுள்ளது என்னும்; உணர்வு மாற்றினார் - உணர்வையும் மாற்றிக் கொண்டவர்களாய், இழுகிய நெய் எனும் - விழுதாக உறைந்த நெய் போன்ற; இருட் பிழம்பினுள் - இருளின் தொகுதியில்; முழுகிய - மூழ்கி விட்ட; மெய்யர் ஆய் - உடம்பையுடையவர்களாய்; (ஒருவர்க்கொருவர் இருப்பிடம் அறிந்து கொள்ள முடியாமல்); உயிர்ப்பு முட்டினார் - (மனத்துயராலும் அச்சத்தாலும்) பெருமூச்செறிந்தார்கள்.
வானரவீரர் இருட்பிழம்பினுள் அகப்பட்டுக் கொண்டதால் மேற்கொண்டு செய்யும் செயலில் நாட்டமில்லாது ஒருவரையொருவர் காணமுடியாது திகைத்துப் பெருமூச்சுவிட்டார்கள் என்பது. உயிர்ப்பு முட்டுதல் : மூச்சுமூட்டுதல் என்பது வழக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They could not rise; they had no thought of lifting a foot to go on;
- they lost all sense that there was any way through;
- in a mass of darkness thick as congealed, smeared ghee,
- their bodies sunk in it, they gasped for breath.
What the poem says
The darkness is so thick that it is compared to solid, congealed ghee. Buried in it, the monkeys cannot see each other, lose all sense of direction and any hope of a way out, and stand still, gasping with fear and distress.