கம்பராமாயணம் 4640 · கிட்கிந்தா 13.29

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்
பொன்றினம் யாம் எனப் பொருமு புந்தியார்
'வன்திறல் மாருதி! வல்லையோ எமை
இன்று இது காக்க?'என்று இரந்து கூறினார்.

பொருள் · Meaning in Tamil

செய்வது ஓர் நிலைமை - (அனுமனைத் தவிர மற்றைய வானர வீரர்கள்) இன்னது செய்யவேண்டும் என்ற செயலையும்; ஓர்கிலர் நின்றனர் - உணரமாட்டாது நின்றவர்களாய்; பொன்றினம் யாம் என - இறந்துவிட்டோம் நாம் என்று; பொருமும் புந்தியர் - வருந்துகின்ற மனமுடையவர்களுமாகி, வன்திறல் மாருதி - (அனுமனை நோக்கி) மிக்க வலிமையுடைய அனுமனே! இன்று - இப்பொழுது; எமை இது காக்க வல்லையோ - எங்களை இத்துயரத்திலிருந்து காப்பதற்கு வல்லமையுடையையோ என்று முறையிட்டு; இரந்து கூறினார் - வேண்டிக் கொண்டார்கள்.

இருள் தொகுதியில் அகப்பட்டுக் கொண்ட அந்த வானரவீரர் தம்மை இறந்து போனவர்களாகவே கருதி வருத்தமுற்று அனுமனை விளித்து, 'இன்று எங்களை இத் துயரத்திலிருந்து காக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டனர் என்பது. புந்தி: எண்ணம். ஓர்கிலர்: முற்றெச்சம். அல் - எதிர்மறை இடைநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They stood there, unable to see any course to take,
  2. their minds heaving as they thought, 'We are dead';
  3. 'Māruti of mighty strength! are you able to save us
  4. from this today?' they said, pleading.

What the poem says

Helpless in the thick darkness and sure they are as good as dead, the other monkeys cannot think what to do. They turn to Aṉumaṉ, the strongest and wisest among them, and beg him to rescue them from this plight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟaṉar ceyvatu ōr nilaimai ōrkilar
poṉṟiṉam yām eṉap porumum puntiyār
'vaṉ tiṟal māruti! vallaiyō emai
iṉṟu itu kākka?' eṉṟu irantu kūṟiṉār.