கம்பராமாயணம் 4641 · கிட்கிந்தா 13.30

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உய்வுறுத்துவென் - (மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க (வேண்டியன) செய்வேன்; மனம் உலையிர் - உள்ளம் வருந்த வேண்டா; ஊழின் - முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று); வால் மெய்யுறப் பற்றுதிர் - (எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; விடுகிலீர் என - அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு; அக்கணத்தினில் - (அவ் வானரர்கள் தனது வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே; ஐயன் - சிறந்தவனான அந்த அனுமன்; அகலும் நீள்நெறி - செல்லவேண்டிய அந்தக் குகையின் வழியில்; கையினில் தடவி - கையால் தடவிக் கொண்டு; வெங்காலின் ஏகினான் - வேகத்தையுடைய காலினால் நடந்து முன்னே சென்றான்.

இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப் பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால் முன்னே நடந்து சென்றான் என்பது. காலின்: காற்றுப்போல விரைந்து என்றும் பொருள் கொள்ளலாம். இருளாதலால் அனுமன் தடவிச் சென்றான் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I will bring you through; do not lose heart; one behind another,
  2. hold my tail firmly, and do not let go,' he said;
  3. and at that moment the noble one, along the long, wide way,
  4. feeling with his hands, went on with swift feet.

What the poem says

Aṉumaṉ reassures them and tells them to line up and hold on tightly to his long tail. Then he leads them forward through the black passage, groping his way with his hands and moving quickly; "swift feet" can also be read as "swift as the wind", his father.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uyvuṟuttuveṉ maṉam ulaiyir; ūḻiṉ vāl
meyyuṟap paṟṟutir; viṭukilīr' eṉa
aiyaṉ ak kaṇattiṉil akalum nīḷ neṟi
kaiyiṉil taṭavi veṅ kāliṉ ēkiṉāṉ.