கம்பராமாயணம் 4642 · கிட்கிந்தா 13.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடும் பொன்கிரி என - உயர்ந்த மேருமலைபோல; பொலிந்த தோளினான் - விளங்கும் தோள்களையுடைய அனுமான்; பன்னிரண்டு யோசனை - பன்னிரண்டு யோசனை தூரம்; படர்ந்த மெய்யினன் - வளர்ந்த உடலையுடையவனாய், மின் இரண்டு அனைய - (தன் காதுகளில் அணிந்துள்ள) இரண்டு மின்னற்கொடி போன்று; குண்டலங்கள் வில் இட - குண்டலங்கள் ஒளியை வீசுவதால்; துன் இருள் தொலைந்திட - அடர்ந்த இருள் அகன்றொழிய; துரிதத்து ஏகினான் - விரைவாகச் சென்றான்.
அனுமன் பேருருவமெடுத்துத் தன் குண்டலங்கள் விட்டுவிட்டு ஒளி வீசுவதால் இடையிடையே இருள் விலகிச் செல்ல, அந்தக் குகையின் உட்புறத்தில் சென்றான் என்பது. அனுமன் நினைத்த உருவம் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவன்; எதிர்ப்பட்டவர்களையும் கொடிய விலங்குகளையும் அச்சுறுத்துவதற்காக அனுமன் இந்தப் பேருருவைக் கொண்டான் என்பது குறிப்பு. அனுமன் நிறமும் பொன்னிறம், வடிவும் பெரிது' என்பது கொண்டு மேருமலையை உவமையாக்கினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His body grown to twelve yōjaṉas,
- as his earrings, like two flashes of lightning, threw out their light
- and the thick darkness was scattered, he went on swiftly,
- he whose shoulders shone like a tall mountain of gold.
What the poem says
Aṉumaṉ, who can take any form he likes, swells to an enormous size, perhaps to frighten off any enemy or wild beast in the dark. His earrings flash like lightning and break up the darkness as he strides on.
His golden colour and great bulk are why his shoulders are compared to Mēru, the golden mountain.