கம்பராமாயணம் 4643 · கிட்கிந்தா 13.32

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடிநகர் கண்டனர் - (அந்தப் பிலத்தின் உட்புறத்தில்) சிறந்த நகரமொன்றை வானரர் கண்டார்கள்; கமலத்து ஒண்கதிர் மண்டிலம் - தாமரையை மலரச் செய்யும் ஒளி மிக்க கதிர்களையுடைய சூரிய மண்டலமானது; மறைந்து உறைந்து அனைய மாண்பது - அந்த இடத்து வந்து மறைந்து தங்கினாற் போன்ற பெருமை வாய்ந்தது; விண்தலம் நாண் உற - வானத்திலுள்ள சொர்க்கலோகமும் வெட்கப்படுமாறு; விளங்குகின்றது - (அதைவிடச் சிறப்பாக) ஒளிபெற்று விளங்குவது; புண்டரிகத்தவள் வதனம் போன்றது - செந்தாமரை மலரில் வாழ்பவளான திருமகளின் முகத்தையொத்து விளங்குவது.

பிலத்துள் இருந்த அந்த நகரம் மிகுந்த ஒளி பெற்றமையால் மறைந்துள்ள ஒரு சூரியமண்டலம் போலவும், செல்வச் சிறப்பாலும், பொன்னிறமான பொருள்களையுடைமையாலும் சுவர்க்க லோகமும் நாணுமாறு பொலிவு பெற்றும், மிக்க அழகுள்ளமையால் இலக்குமியின் முகத்தையொத்தும் விளங்கியது என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They saw a well-guarded city, as splendid as if the bright orb of rays that opens the lotus
  2. had gone into hiding and settled there;
  3. it shines so that the heavenly realm is put to shame;
  4. it is like the face of her who dwells in the lotus.

What the poem says

Deep inside the cavern the monkeys come upon a magnificent city. It blazes as if the sun itself had hidden there, its wealth and golden splendour would shame heaven, and its beauty is like the face of Lakṣmī, the lotus goddess.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉar kaṭi nakar kamalattu oṇ katir
maṇṭalam maṟaintu uṟaintaṉaiya māṇpatu;
viṇtalam nāṇuṟa viḷaṅkukiṉṟatu;
puṇṭarikattavaḷ vataṉam pōṉṟatu.