கம்பராமாயணம் 4644 · கிட்கிந்தா 13.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கற்பகக் கானது - (அந்த நகரம்) கற்பகம் போன்ற மரங்களையுடையது; கமலக் காடது - (தாமரை மலர்களையுடைய) நீர்நிலையையுடையது; பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது - பொன்னிறமான உயர்ந்த கோபுரங்களையுடைய மதில்கள் அமையப் பெற்றது; அமரரும் அற்புதம் எய்தல் ஆவது - தேவர்களும் (கண்டு) வியப்படையக் கூடியது; சிற்பமும் - சிற்ப வேலைகளும்; மயன் மனம் வருந்திச் செய்தது - மயன் என்னும் அசுரத் தச்சன் (பலநாள் மனம் வருந்தித் துன்பப்பட்டு அமைத்தது.
இந்த நகரம் பொன்மயமான மரங்களையுடையதென்பதும், பொன்னுலகில் வாழும் தேவர்களும் கண்டு வியப்படையுமாறு தோற்றச் சிறப்புடையதென்பதும், அசுர சிற்பியான மயனால் அமைக்கப்பட்டதென்பதும் இதிற் குறிக்கப் பெற்றுள்ளன.
எல்லாவற்றையும் எளிதில் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய மயன் என்னும் அசுரத் தச்சனும் பல நாட்கள் மனத்தால் எண்ணிச் சிந்தித்துச் செய்யப் பெற்றது என்று அந்த நகரத்தின் அருமையும், பெருமையும் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It has groves of kaṟpakam trees; it has thickets of lotus;
- it lies within walls crowned by great golden gate-towers;
- it is a wonder that would astonish even the gods;
- its craftsmanship Mayaṉ wrought with long toil of mind.
What the poem says
The hidden city has trees like the heavenly kaṟpakam, lotus pools and walls with tall golden gateways, a sight to astonish the gods.
It was built by Mayaṉ, the architect of the asuras, who can make anything at a thought; that even he had to labour long over this city shows how marvellous it is.