கம்பராமாயணம் 4645 · கிட்கிந்தா 13.34

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இந்திர நகரமும் இணை இலாதது;
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து எழுசுடர் அவை இன்று ஆயினும்
உந்தரும் இருள் துரந்து ஒளிர நிற்பது.

பொருள் · Meaning in Tamil

இந்திரன் நகரமும் - (இன்னும் அந்த மாநகரம்) இந்திரன் நகரமாகிய அமராவதியும், இணை இலாதது - தனக்கு இணையாகப் பெறாத தகுதியுடையது; அந்தரத்து எழு சுடர் அவை - வானத்தில் உதிக்கிற கதிரவன், சந்திரன் என்ற இரண்டு சுடர்களும்; இன்றாயினும் - (அங்கே) தோன்றவில்லை யென்றாலும்; மந்திர மணியினின் - (அந்த நகரத்தின்) மாளிகைகளில் பதிக்கப் பெற்ற மாணிக்கங்களினாலும்; பொன்னின் - பொன்னாலும்; உந்த அரும் இருள் - நீக்குவதற்கு அரிய பேரிருளையும்; துரந்து ஒளிர நிற்பது - அகற்றி ஒளி விளங்கச் செய்வது.

அந்தப் பிலத்தின் உட்புறத்திலுள்ள அந்த நகரம் சூரிய சந்திரர்களின் ஒளியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் தன்னிடம் நிரம்பியுள்ள மாளிகை இரத்தினங்களாலும், பொன்னாலும் காரிருளையொழித்து விளங்கும் என்பது. மந்திரம் : அரண்மனை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It is such that even Intiraṉ's city is no match for it;
  2. by the gems of its mansions, by its gold and by its very soil,
  3. though the lights that rise in the sky are absent there,
  4. it drives away the darkness that is so hard to dispel, and stands shining.

What the poem says

Not even Amarāvati, the city of Intiraṉ, king of the gods, can equal it. Though no sun or moon ever shines underground, the gems set in its palaces and its gold give enough light to banish the cave's heavy darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ nakaramum iṇai ilātatu;
mantira maṇiyiṉiṉ poṉṉiṉ maṇṇiṉil
antarattu eḻu cuṭar avai iṉṟu āyiṉum
unta arum iruḷ turantu oḷira niṟpatu.