கம்பராமாயணம் 4646 · கிட்கிந்தா 13.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புவி புகழ் சென்னி - (மேலும் அந்த நகரம்) உலகத்தவரால் பெரிதும் புகழப்படுகின்ற குலோத்துங்க சோழனாகிய; பேர் அமலன் தோள் புகழ் - பெருமையுள்ள குற்றமற்ற அரசனது தோள்வலிமையைப் புகழ்ந்து பாடிய; கவிகள் தம் மனை என - கவிஞர்களின் வீடுகள் போல; கனக ராசியும் - பொற் குவியலும்; சவியுடைத் தூசும் - ஒளி மிக்க பொன்னாடைகளும்; மென் சாந்தும் - மென்மையான கலவைச் சந்தனமும்; மாலையும் - மலர் மாலைகளும்; அவிர் இழைக்குப்பையும் - ஒளிவிட்டு விளங்கும் அணிகலன்களின் குவியல்களும்,; அளவு இலாதது - அளவில்லாதபடி நிறையப் பெற்றது.
குலோத்துங்க சோழன் தன்னை நாடி வந்து பாடுகின்ற கவிஞர்களுக்கும் பொற்குவியல் முதலியன கணக்கின்றிக் கொடுக்கும் வன்மையுடையவன் என்பதைக் கம்பர் செய்ந்நன்றியுணர்வால் குறித்தார் என்பது சவி: ஒளி. தூசு: ஆடை. இழை: அணிகலன். இழைத்துச் செய்யப்படுவது - காரணக் குறி. இங்கே சோழனது பெருமை உவமான முகத்தால் பாராட்டியுரைக்கப் பெற்றுள்ளது. தம்மைப் புரந்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே நினைந்து பாராட்டுவது போலச் சோழ மன்னனையும் இங்கே நினைந்து போற்றுகிறார் கம்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the homes of those who praise the arms of the great, flawless Ceṉṉi whom the earth acclaims,
- the poets, it holds heaps of gold,
- shimmering cloths, soft sandal paste and garlands,
- and piles of gleaming jewels beyond all measure.
What the poem says
The deserted city is crammed with gold, fine cloth, sandal paste, garlands and jewels, as full as the houses of poets who sing the praises of the Cōḻa king.
Ceṉṉi is a title of the Cōḻa kings; the commentary takes it as Kulōttuṅka Cōḻaṉ, famous for his lavish gifts to poets. Kampaṉ pays his royal patron a compliment here in passing, as elsewhere he remembers his other patron, Caṭaiyappa Vaḷḷal.