கம்பராமாயணம் 4647 · கிட்கிந்தா 13.36

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பயில்குரல் கிண்கிணி பதத்த பாவையர்
இயல்பு உடை மைந்தர்கள் இயக்கு இலாமையால்
துயிலவும் நோக்கவும் துணையது அன்றியே
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது.

பொருள் · Meaning in Tamil

பயில் குரல் கிண்கிணிப் பதத்த பாவையர் - (இன்னும் அந்த நகரம்) ஒலிக்கின்ற ஓசையுடைய சதங்கை அணிந்த கால்களை உடைய மகளிரும்; இயல்புடை மைந்தர் - நற்பண்புகள் வாய்ந்த ஆண்களும்; என்று இவர் இலாமையால் - என்ற இவர்களுடைய நடமாட்டம் இல்லாததால்; துயில்வுறும் நோக்கமும் துணைப்பது - உறங்கப் போகின்றவர்களை ஒப்பவும், அன்றியும் - அல்லாமலும்; உயிர் இலா - உயிர் இல்லாமல் இருக்கின்ற; ஓவியம் என்ன - சித்திரம் போன்றது என்று சொல்வதற்கு, ஒப்பது - தகுதியுடையதாகவுள்ளது.

மிக வல்லமை வாய்ந்த ஓவியன் ஒருவனால் வரையப்பட்ட சித்திரம் மற்றெவ்வகையிலும் குறைபாடு இல்லாமலிருப்பினும், உயிரில்லாததாகிய ஒரு குறையைக் கொண்டது போலப் பலவகைக் காட்சிகளும் நிரம்பிய இந்த நகரம் வேறு வகையால் குறைபாடில்லாமல் இருந்தாலும் தன் காட்சிகளைக் கண்டு நுகரும் பெண்டிரையும், ஆடவரையும் பெறாத ஒரு பெருங்குறையைக் கொண்டுள்ளது என்பது. துணைப்பது என்னும் சொல்லாட்சி காண்க. (துணை என்ற பெயர்ச் சொல் ஒப்பு என்ற பொருளில்வந்தது).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since there were none there, neither young women whose feet wear chiming anklet-bells
  2. nor men of noble nature,
  3. it seemed like a place sunk in sleep, and more than that,
  4. it resembled a painting with no life in it.

What the poem says

For all its riches, the city is empty: no women with tinkling anklets, no men. It seems asleep, or like a painting by a master that is perfect in every way except that it has no life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1payil kural kiṇkiṇip patatta pāvaiyar
iyalpuṭai maintar eṉṟu ivar ilāmaiyāl
tuyilvuṟa nōkkamum tuṇaippatu aṉṟiyum
uyir ilā ōviyam eṉṉa oppatu.