கம்பராமாயணம் 4648 · கிட்கிந்தா 13.37

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் - (அந்த நகரம்) அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும்; தமிழ் நிகர் நறவமும் - தமிழ்மொழியையொத்த இனிய தேனும்; தனித்தண் தேறலும் - ஒப்பற்ற குளிர்ந்த மதுவும்; இமிழ் கனிப் பிறக்கமும் - இனிய பழங்களின் திரட்சியும்; இன்னன பிறவும் - இவை போன்ற பிற உணவுப் பொருள்களும்; கமழ்வு உறத் துவன்றிய - மணம் வீசுமாறு நிறைந்துள்ள; கணக்கு இல் கொட்பது - எல்லையற்ற பெருமை வாய்ந்தது.

உண்டு களித்தற்கு இனிய பலவகைப் பண்டங்களும் நிறைந்துள்ளது அந்த நகரம் என்பது. 'தமிழ் நிகர் நறவமும்' என்ற தொடரால் ஆசிரியரின் மொழிப் பற்றினையுணரலாம்; தொடர்பு கொண்டாரின் அறிவையும் உணர்வையும் கவர்ந்து கொள்ளை கொள்ளுதல் பொதுப்பண்பு. கொட்பு: பெருமை; பிறக்கம்: திரட்சி. (மலை-) இலக்கணை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rice sweet as nectar with all that goes with it,
  2. honey as sweet as Tamil, and cool, unrivalled liquor,
  3. heaps of luscious fruit, and other such things
  4. crowd there, fragrant, in countless abundance.

What the poem says

The city is stocked with every kind of food and drink: rice like nectar, honey, cool wine and heaps of ripe fruit.

The phrase "honey as sweet as Tamil" shows the poet's love of his language; like honey, Tamil captivates both the mind and the feelings of those who take it in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1amiḻtu uṟaḻ ayiṉiyai aṭutta uṇṭiyum
tamiḻ nikar naṟavamum taṉit taṇ tēṟalum
imiḻ kaṉip piṟakkamum piṟavum iṉṉaṉa
kamaḻvuṟata tuvaṉṟiya kaṇakku il koṭpatu.