கம்பராமாயணம் 4649 · கிட்கிந்தா 13.38

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கன்னிநெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்;
'இந்நகரம் ஆம் இகல் இராவணனது ஊர்'என்று
உன்னி உரை ஆடினர் உவந்தனர் வியந்தார்
பொன்னின் நெடு வாயில் அதன் ஊடு இனிது புக்கார்.

பொருள் · Meaning in Tamil

அன்னது - (அனுமன் முதலிய வானர வீரர்கள்) அத்தன்மை வாய்ந்த; கன்னி நெடு மா நகரம் - என்றும் அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தை; எதிர் கண்டார் - கண்ணெதிரே கண்டவர்களாய்; இந்நகர் - இந்த நகரமானது; இகல் இராவணனது - பகைமையையுடைய இராவணனது; ஊர் ஆம் என்று உன்னி - நகரமாகுமென்று மனத்தில் நினைந்து; உரையாடினர் - தமக்குள் பேசிக்கொண்டு; உவந்தனர் வியந்தார் - மகிழ்ச்சியும் வியப்பும் ஒரே சமயத்தில் அடைந்தவர்களாய், பொன்னின் நெடுவாயில் அதன் ஊடு - பொன் மயமான நீண்டு அகன்ற அந்த நகரத்து வாயிலில்; இனிது புக்கார் - இனிதாக நுழைந்து சென்றார்கள்.

அந்த நகரத்தை வானர வீரர் கண்டதும் இராவணனது இலங்கையென்று நினைத்து உடனே சீதையைக் காணலாமென்ற மகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தார்கள் என்பது. கன்னி: அழிவின்மை. கண்டார் உரையாடினர், வியந்தார் - முற்றெச்சங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They saw before them that vast, tall, ageless city;
  2. 'This city must be the town of hostile Irāvaṇaṉ,'
  3. they thought, and spoke together, glad and amazed,
  4. and went right in through its tall golden gate.

What the poem says

Once more the monkeys jump to a conclusion: this splendid city must be Irāvaṇaṉ's Ilaṅkai. Delighted and astonished, expecting to find Cītai at once, they pass through its golden gateway.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉṉi neṭu mā nakaram aṉṉatu etir kaṇṭār;
'in nakaram ām ikal irāvaṇaṉatu ūr' eṉṟu
uṉṉi uraiyāṭiṉar uvantaṉar viyantār
poṉṉiṉ neṭu vāyil ataṉūṭu naṉi pukkār.