கம்பராமாயணம் 4650 · கிட்கிந்தா 13.39

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புக்க நகரத்து - (வானர வீரர்கள் தாங்கள்) நுழைந்த அந்த நகரத்தில்; இனிது நாடுதல் புரிந்தார் - மகிழ்ச்சியோடு தேடத் தொடங்கினார்கள்; தேவர் தலை - தேவர்கள் முதலாக; மக்கள் கடை - மனிதர்கள் ஈறாக; வான் உலகின் - வானுலகத்திலும், வையத்து - நிலவுலகத்திலும்; ஒக்க உறைவோர் உருவம் - ஒரு சேரப் பொருந்தி வாழுகின்றவர்களின் உருவங்கள்; ஓவியம் அலால் - சித்திர வடிவங்களாக அல்லாமல்; மற்று எக்குறியின் உள்ளவும் - வேறு உயிருடைய எந்தப் பொருள்களையும்; எதிர்ந்திலர் - காணப் பெறாதவர்களாய்; திரிந்தார் - (அந்த நகர் முழுவதும்) சுற்றி அலைந்தார்கள்.

தேவர்கள், மனிதர்கள் ஆகியோரின் உருவங்கள் சித்திரவடிவமாகக் காணப்பட்டனவேயல்லாமல் மெய்ம்மையான வடிவமுடை ஓர் உயிராவது அந்த நகரத்தில் காணப்படவில்லை என்பது. மக்கள் தேவர் என்ற முறைக்கேற்ப வையம், வானுலகு என்று நிறுத்தாது மாற்றி நிறுத்தியது எதிர் நிரல் நிறைப் பொருள்கோளாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the city they had entered they set about searching gladly;
  2. from men, the lowest, to gods, the highest, in the sky-world and on earth,
  3. the forms of all who live there alike they saw only in paintings; any other
  4. being of any kind they did not meet as they wandered.

What the poem says

The monkeys search the city eagerly, but the only beings they find are painted ones: pictures of gods and men, of heaven and earth. There is not a single living creature anywhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukka nakarattu iṉitu nāṭutal purintār;
makkaḷ kaṭai tēvar talai vāṉ ulakiṉ vaiyattu
okka uṟaivōr uruvam ōviyam alāl maṟṟu
ek kuṟiyiṉ uḷḷavum etirntilar tirintār.