கம்பராமாயணம் 4652 · கிட்கிந்தா 13.41

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்;
'மாயை கொல்'எனக் கருதி மற்றும் நினைவு உற்றார்
'தீய பிலனுள் பிறவி சென்ற இது அன்றோ
தூயது துறக்கம்?'என நெஞ்சு துணிவு உற்றார்.

பொருள் · Meaning in Tamil

ஆய நகரத்தின் இயல்பு - அந்த நகரத்தின் தன்மையினை; உள் உற அறிந்தார் - உள்ளே சென்ற வானர வீரர் அறிந்தனர்; 'மாயை கொல்' எனக் கருதி - (அழகும் பயனும் நிறைந்தும்) பயன்கொள்வார் எவரும் இலாத (இந்நகரின் நிலை) ஒரு மாயைத் தோற்றமாக இருக்கக் கூடுமோ என முதலில் நினைத்து; மற்றும் நினைவு உற்றார் - வேறு வகையாகவும் நினைத்தார்கள்; முன் தீய உடற்பிறவி சென்ற அது அன்றோ - முதலில் (பாவதி) தீமையுடைய உடற் பிறவி கழிந்த பின்னிலை அன்றோ; தூயது துறக்கம் - தூய்மையானதாகிய சுவர்க்கம் காண்பது, என நெஞ்சு துணிவுற்றார் - என்று மனத் துணிவு கொண்டனர்.

பிலத்தினுள் புகுந்து இறங்கி வந்ததனால் 'இந்நகரம் நரக உலகத்ததாயிருக்கலாமோ, இப்படி ஒரு மாயத் தோற்றமாய் உள்ளதே' என்று முதலில் நினைந்தனர் ஆனால், அங்குக் காணப்பெற்ற வனப்பும் வசதியும் நிறைந்த நிலையைக் கண்டு, வேறு வகையாக நினைத்தார்கள்; அதாவது, இது சுவர்க்கமாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால், உடற்பிறவி நீங்கிய பிறகுதானே சுவர்க்கம் காண முடியும் என்றும் நெஞ்சத்திலே எண்ணம் எழுந்தது. நரகம் அன்று என முதலில் மறுத்ததால் அடுத்து எழுந்த நினைவைத் 'துணிவு' எனக் கவிஞர் குறித்தார். ஆனால், அத்துணிபு பற்றியும் ஐயம் நிகழ்ந்ததை உடற்பிறவி அழிந்தபின் வரும் நிலையன்றோ சுவர்க்கம் என்ற கேள்வி புலப்படுத்திற்று. இக்கேள்வியில் விளைந்த விளக்கத்தைத் தெளிவுறுத்துவது அடுத்த பாடல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They came to know the nature of that city from within;
  2. thinking 'Can this be illusion?', they thought again:
  3. 'Is it not only when this earlier, evil bodily birth has passed
  4. that pure heaven is reached?' So their hearts concluded.

What the poem says

Finding the city rich and beautiful yet completely empty, the monkeys first wonder whether it is a magic illusion, perhaps even an underworld, since they came down into it through a cave.

Then its splendour makes them think it must be heaven. But heaven is reached only after this mortal body is shed, which raises a new doubt, taken up in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya nakarattiṉ iyalpu uḷ uṟa aṟintār;
'māyaikol' eṉak karuti maṟṟum niṉaivuṟṟār
'tīya muṉ uṭaṟ piṟavi ceṉṟa atu aṉṟō
tūyatu tuṟakkam?' eṉa neñcu tuṇivuṟṟār.