கம்பராமாயணம் 4653 · கிட்கிந்தா 13.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இறந்திலம் - (நாம் விண்ணுலகையடைந்து விட்டோமென்றால்) நாம் சாகவில்லையே; இதற்கு உரியது எண்ணுகிலம் - இந்த வானுலகை அடைவதற்குரிய வழிகளையும் கருதினோம் இல்லையே; ஏதும் மறந்திலம் - முன்பு நிகழ்ந்த எதனையும் மறக்கவுமில்லையே; அயிர்ப்பினொடு இமைப்பு உள - ஐயப்படுதலும் இமைப்பதும் நம்மிடம் உள எனவே, மயக்கம் பிறந்தவர் - மயக்கமடைந்தவர்கள்; செயற்கு உரிய செய்தல் - செய்வதற்குரிய தவறான செயலை; இன்று - இப்பொழுது நாம் செய்தல்; பிழை - பிழையாகும்; திறம் தெரிவது என் - (நமக்கு நேர்ந்துள்ள) நிலையைக் குறித்து எண்ணித் தெளிவது எவ்வாறு? என இசைத்தனர் - என்று (வானர வீரர்கள் தமக்குள் கூறிக் கொண்டவர்களாய், திகைத்தார் - மனம் மயங்கி நின்றார்கள்.
சுவர்க்கமடைந்தவர்களாகத் தம்மை கருதிய வானரவீரர்கள், உடலோடு இருப்பதாலும், சுவர்க்கம் புகுவதற்குரிய வழிகளைச் செய்யாமையாலும், சீதையைத் தேடுதல் முதலான முன்னைய எண்ணங்கள் தொடர்ச்சியாக உண்டாவதனாலும் தெளிவில்லாமல் இருத்தலும் கண்ணிமைத்தலும் மதி மயக்கம் தமக்கு நேராமையாலும் தாம் சொர்க்கத்தையடையவில்லையெனத் துணிந்தனர் என்பது. இசைத்தனர் : முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We have not died; we have done nothing to earn this; we have forgotten
- nothing; we still doubt, and our eyes still blink; to act
- as deluded people act would be a mistake now;
- how are we to know our true state?' they said, bewildered.
What the poem says
The monkeys reason it out. They have not died, they have done nothing to earn heaven, they still remember everything, including their search for Cītai, and they still feel doubt and blink their eyes, which the gods never do.
So this cannot be heaven. But they still cannot work out where they are, and stand there confused.